பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 349 

செய்மின்!; செப்பும் இப் பொருளும் கேண்மின்! - (மற்றும்) கூறும் இப் பொருளையும் கேண்மின்!

 

   (வி - ம்.) இல்லற நெறிநின்று முதிர்ந்த உணர்வுடையோர் எல்லாம் வீடுபெற முயலுதலே முறைமையாதல் பற்றியும் வீடுபேறே பிறவிப்பயன் ஆதல் பற்றியும் அவம்புரிந்து உடம்பு நீங்காது அருந்தவம் முயன்மின் என்றார். இவ்விரண்டு செய்யுளும் திருக்குறளின் அறத்துப்பாற் கருத்தையெல்லாம் தம்முளடக்கித் திகழ்தல் ஆராய்ந்துணர்க. சிவம் - மெய்ந்நெறி நன்மை.

( 113 )
606 அம்மல ரனிச்சத் தம்போ தல்லியோ டணியி னொந்து
விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந் தணங்கு சோ்ந்த
வெம்முலைப் பரவை யல்குன் மிடைமணிக் கலாபம் வேய்த்தோட்
செம்மலர்த் திருவின் சாயற் றேமொழி தத்தை யென்பாள்.

   (இ - ள்.) அனிச்சத்து அம்போது அம்மலர் அல்லியோடணியின் - அனிச்சத்தின் அழகிய மலரை அழகிய மலர்களின் அகவிதழுடன் அணியினும்; நொந்து விம்முறு நுசுப்பு நைய - நொந்து வருந்தும் இடை மேலும் வருந்துமாறு; வீற்றிருந்து அணங்கு சேர்ந்த வெம்முலை - வீற்றிருந்து அழகுத் தெய்வம் சேர்ந்த விருப்பம் உறுதற்குக் காரணமான முலைகளையும்; பரவை அல்குல் மிடைமணிக் கலாபம் வேய்த்தோள் - பரவிய அல்குலையும் அதன்மேற் செறிந்த மணிக் கலாபத்தையும் மூங்கிலனைய தோள்களையும்; செம்மலர்த் திருவின் சாயல் - செந்தாமரை மலரில் இருக்கும் இலக்குமியின் மென்மையினையும் உடைய; தேமொழி தத்தை என்பாள் - தேனனைய மொழியினாள் தத்தை எனும் பெயரினாள்.

 

   (வி - ம்.) அல்லி - அகவிதழ். முலைகளில் அழகுத் தெய்வம் உறைதல் 'ஆம் அணங்கு குடியிருந்து' (சீவக. 171) என முன்னரும் வந்தது.

( 114 )
607 மற்றவ டந்தை நாய்கன் வண்கைச்சீ தத்தன் என்பான்
கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருளி தாகும்
முற்றவம் உடையளாகி மூரிநூற் கலைக ளெல்லாங்
கற்றவள் கணங்கொள் நல்யா ழனங்கனைக் கனிக்கும் நீராள்.

   (இ - ள்.) அவள் தந்தை நாய்கன் வண்கைச் சீதத்தன் என்பான் - அவள் வளர்ப்புத் தந்தையாகிய வணிகனும் வள்ளலுமாகிய சீதத்தனென்பவன்; கொற்றவன் குலத்தின் வந்தான் - அரசனாகிய கலுழவேகனின் குலத்துடனே வந்தவன்; கூறிய பொருள் இது ஆகும் - அவன் சொன்ன பொருள் இதுவாகும்;