பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 353 

   (இ - ள்.) எரிமணிக் கடகம் முன்கை - ஒளிசெயும் மணிக்கடகம் அணிந்த முன்கையினையும்; சிலை பொரத் திரண்ட திண்தோள் - வில் தழும்புறத் திரண்ட திண்ணிய தோளினையும்; மலைபொர அரிய மார்பின் - மலை பொருதற்கரிய மார்பினையும்; சில் அரிச் சிலம்பினார் தம் இலை பொர எழுதி அன்ன முலை பொர உடைந்த தண்டார் - சில அரிகளையுடைய சிலம்பு மகளிரின் இட்ட இலைத்தொழில் நெருங்க எழுதினாற் போன்ற முலைகள் தாக்குதலால் மலர்ந்த குளிர்ந்த தாரினில்; மொய்ம்மதுத் துளிப்ப - மிகுந்த தேன் துளிசெய்ய; வாரணவாசி மன்னன் வந்தான் -வாரணவாசி வேந்தன் வந்தான்.

 
613 கதிர்முடி மன்னர் சூழ்ந்து
  கைதொழு திறைஞ்சி மாலைத்
திருமுடி வயிர வில்லாற்
  சேவடி திளைப்ப வேத்தி
யருமுடி யணிந்த கொற்றத்
  தவந்தியன் முரச மார்ப்ப
வொருபிடி நுசுப்பி னாளை
  யுள்ளுபு வந்து விட்டான்.

   (இ - ள்.) கதிர்முடி மன்னர் சூழ்ந்து கைதொழுது - ஒளிவிடும் முடிவேந்தர்கள் சூழ இருந்து கையால் தொழுது; மாலைத் திருமுடி வயிர வில்லால் சேவடி திளைப்ப இறைஞ்சி ஏத்தி - தம்முடைய மாலையணிந்த திருமுடியில் உள்ள வயிர ஒளியாலே அவன் சேவடி ஒளியிடையறாது இருக்குமாறு வணங்கி வாழ்த்த; அருமுடி அணிந்த கொற்றத்து அவந்தியன் - அரிய முடிபுனைந்த வெற்றிபெற்ற அவந்தி மன்னன்; முரசம் ஆர்ப்ப - முரசு ஒலிக்க; ஒருபிடி நுசுப்பினாளை உள்ளுபு வந்து விட்டான் - ஒரு பிடியின்கண் அடங்கும் இடையினாளை நினைத்து வந்திட்டான்.

 

   (வி - ம்.) ஏத்தி - ஏத்த : வினையெச்சத் திரிபு.

( 121 )
614 வெள்ளணி யணிந்த ஞான்றே
  வேந்தர்தம் முடியிற் கொண்ட
கள்ளணி மாலை மோந்து
  கனைகழ லிலங்கும் நோன்றாட்
புள்ளணி கொடியி னானிற்
  போர்பல தொலைத்த வாற்ற
லள்ளிலை யணிந்த வைவே
  லயோத்திய ரிறையும் வந்தான்.