| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
361  | 
  | 
| 
    (வி - ம்.) பூசி - பூச : வினையெச்சத் திரிபு. 
 | 
  | 
| 
    இருஞ்சிலை என்றது வானவில்லை. இது முத்துவடத்திற்குவமை. சிறுபுறம் - முதுகு. ஐதா - மென்மையாக. ஐதாக எனல் ணேடியது   ஈற்றுக் ககரம் கெட்டு நின்றது. விரிமணி  வியப்ப என்புழி மணி - மாணிக்கமணி. வியப்ப : உவமவுருபு. 
 | 
  | 
|   | 
”இதுமெயென் றின்றுந் தேறார் இருநிலத் துறையு மாந்தர் | 
  | 
|   | 
புதுமையைப் பொருளி தென்னார் பழமையைப் பொருளிதென்பர் | 
  | 
|   | 
மதுமய மாலைத்தோழி பழமையைப் பழித்து மாதோ | 
  | 
|   | 
புதுமையே பொருளிதாதல் பூங்கண்ணி னுணர்த்தி னாளே” | 
  | 
| 
    என ஒரு செய்யுள் சில கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுகின்றது. 
 | 
( 133 ) | 
|  626 | 
அருங்கயம் விசும்பிற் பார்க்கு |  
|   | 
  மணிச்சிறு சிரலை யஞ்சி |  
|   | 
இருங்கயந் துறந்து திங்க |  
|   | 
  ளிடங்கொண்டு கிடந்த நீலம் |  
|   | 
நெருங்கிய மணிவிற் காப்ப |  
|   | 
  நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க் |  
|   | 
கருங்கய லல்ல கண்ணே |  
|   | 
  எனக்கரி போக்கி னாரே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நீண்டு உலாய் பிறழ்வ - நீண்டு உலவிப் பிறழ்கின்ற இவை; அருங்கயம் விசும்பின் பார்க்கும் - அரிய குளத்தில் விசும்பிலிருந்து (தம்மை) நோக்கும்; அணிச் சிறு சிரலை அஞ்சி - அழகிய சிறிய சிச்சிலிக்கு அஞ்சி ; இருங் கயம் துறந்து - அந்தப் பெரிய குளத்தை நீங்கி; திங்கள் இ டம் கொண்டு - திங்களை இடமாகக் கொண்டு; நீலம் மணி நெருங்கிய வில்காப்ப - நீலமணியாகிய நெருங்கிய வில்காப்ப; கிடந்த - கிடக்கின்ற; கருங்கயல் அல்ல - கரிய கயல்மீன்கள் அல்ல; கண்ணே எனக் கரி போக்கினார் - கண்ணேயென்று கண்டோர் கருதுமாறு மையை எழுதினார். 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'கரி' என்றார் சான்று போலவும் தோன்ற. 'கிடந்து' என்றும் பாடம். 
 | 
  | 
| 
    விசும்பினின்று பார்க்கும் என்க. சிரல் - மீன் கொத்திப் பறவை. இருங்கயம் என்பது சுட்டுமாத்திரையாய் நின்றது. சிரலை அஞ்சி என்றதற்கேற்ப வில் காப்ப என்றார். 
 | 
( 134 ) | 
|  627 | 
பொருந்துபொற் றூண்கள் நான்கிற் |  
|   | 
  பொலிந்துநூற் புலவர் செந்நா |  
|   | 
வருந்தியும் புகழ்த லாகா |  
|   | 
  மரகத மணிசெய் கூடத் | 
 
 
 |