| நாமகள் இலம்பகம் | 
37  | 
 
  | 
 
| 
    என்றும் (பிரபுலிங். மாயையுற்- 11) ; ”களிறு மாய்ப்பக் கதழ்ந்தெழு பூம்பயிர்” என்றும் (தணிகை. நாட்- 114) பிற்றைநாட் புலவர் பலரும் எடுத்தாள்வாராயினர். 
 | 
( 25 ) | 
 
| 
 |  
|  55 | 
ஆய்பிழி விருத்துவண் டயிற்றி யுண்டுதேன் |  
|   | 
வாய்பொழி குவளைகள் சூடி மள்ளர்க |  
|   | 
டேய்பிறை யிரும்புதம் வலக்கை சோ்த்தினா |  
|   | 
ராய்செநெ லகன்றகா டரிகுற் றார்களே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மள்ளர்கள் ஆய்பிழி விருந்து வண்டு அயிற்றி உண்டு - உழவர்கள் சிறந்த கள்ளை விருந்தாக வந்த வண்டினை ஊட்டிப் பிறகு தாமும் உண்டு ; தேன் வாய்பொழி குவளைகள் சூடி - தேனைச் சொரியும் குவளைமலரை அணிந்து; தேய்பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினார் - தேய்ந்த பிறைமதி அனைய இரும்பைத் தம் வலக்கையில் ஏந்தினார்; ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்கள்- தேர்ந்த அகன்ற செந்நெற் காட்டை அரியலுற்றார்கள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) குவளையை ஈண்டுக் களிப்பாற் பறித்துச் சூடினார். காடு பெருமை கூறிற்று. எறிகுற்றாரும் பாடம். விருத்துவண்டு, 'வன்றொடர் மொழியும்' (தொல். எழுத் - குற்றியலுகரப், 9) என்னுஞ் சூத்திரத்தில், 'வல்லெழுத்திடை மிகும்' என்னாது, 'ஒற்று' என்ற மிகுதியான் இயல்பு கணத்துக்கண்ணும் மெல்லொற்றுத் திரிந்தது. 
 | 
  | 
| 
    இச் செய்யுளின்கண் தேவர் உழவர்கியல்பாக அமைந்த விருந்தோம்பற் பண்பினை நினைந்து ”ஆய்பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு” என்ற நுணுக்கம் உணர்க. விருந்தூட்டியுண்டல் சிறந்த தமிழர் பண்பு. அப் பண்பு உழவர்க்கே உரியதுமாம். ”இரவார் இரப்பார்க்கொன்றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்” என்ற வள்ளுவர் பொன் மொழியும் (குறள். 1035) நினைக. 
 | 
( 26 ) | 
|  56 | 
வலியுடைக் கைகளான் மலர்ந்த தாமரை |  
|   | 
மெலிவெய்தக் குவளைகள் வாடக் கம்பலம் |  
|   | 
பொலிவெய்தப் பூம்பொய்கை சிலம்பிப் பார்ப்பெழ |  
|   | 
மலைபட வரிந்துகூன் குயங்கைம் மாற்றினார். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வலியுடைக் கைகளால் - அந்நெல்லை அரிதற்குத் தக்க ஆற்றலுடைய கைகளினால்; மலர்ந்த தாமரை மெலிவு எய்தவும் - அக்கழனிகளில் மலர்ந்துள்ள தாமரைமலர்கள் வருந்தவும் ; குவளைகள் வாட - குவளை மலர்கள் வாடவும்; கம்பலம் பொலிவு எய்த - ஆரவாரம் மிக்கெழுதலால் ; பூம்பொய்கை பார்ப்பு சிலம்பி எழ - மலர்ந்த பொய்கையிலிருந்து குஞ்சுகளுட்படப் பறவைகள் ஒலியுடன் எழ ; மலைபட அரிந்து கூன்குயம் கைமாற்றினார் - மலைபோலக் குவிய நெல்லை அரிந்துவிட்டு வளைந்த அரிவாளைக் கையிலிருந்து மாற்றினார். 
 | 
  |