| நாமகள் இலம்பகம் |
38 |
|
|
(வி - ம்.) கம்பலம் : உரிச்சொல் திரிவு (கம்பலை) . பொய்கை பார்ப்பெழ என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. பட : உவமவுருபு.
|
|
|
முன் களை பறியாதவற்றை ஈண்டுக் களிப்பினால் அரிந்தார்.
|
|
|
உழவர் கையே உலகெலாந் தாங்கும் கை என்பது கருதி வலியுடைக்கைகளான் என்று தேவர் அடைபுணர்த்தனர் என்றல் சிறப்பு என்னை? ”உழவினார் கைம்மடங்கின் 'இல்லை விழைவதூஉம், விட்டே மென்பார்க்கு நிலை” என்பது பொய்யாமொழியன்றோ? (குறள். 1036)
|
( 27 ) |
| 57 |
வாளையி னினந்தலை யிரிய வண்டலர் |
| |
தாளுடைத் தாமரை கிழிய வண்சுமை |
| |
கோளுடை யிளையவர் குழாங்கொண் டேகலிற் |
| |
பாளைவாய்க் கமுகினம் பழங்கள் சிந்துமே. |
|
|
(இ - ள்.) கோளுடை இளையவர் குழாம் - தொழில் ஆற்றலுடைய இளைஞர் திரள் ; வாளையின் இனம் தலை இரிய - வாளையின் குழு தம் இடத்திலிருந்து ஓடவும் ; வண்டு அலர் தாளுடைத் தாமரை கிழிய - வண்டுகள் துகைத்து அலர்ந்த , நாளங்களையுடைய தாமரை மலர்கள் கிழியவும் ; வண்சுமை கொண்டு ஏகலின் - வளவிய நெற்சூட்டைச் சுமந்து செல்வதால்; பாளை வாய் கமுகினம் பழங்கள் சிந்தும் - அச்சுமை பட்டு மடற்கமுகுகள் பழங்களைச் சிந்தும்.
|
|
|
(வி - ம்.) தலை - இடம், வண்டு அலர் - வண்டு துகைத்து அலர்ந்த. பாளைவாய் கமுகு - மடற் கமுகு.
|
|
|
கோள் - ஆற்றல்.
|
|
|
இச் செய்யுளின்கண்,
|
|
| |
”நாடென்ப நாடா வளத்தன நாடல்ல |
|
| |
நாட வளந்தரு நாடு” (குறள். 739) |
|
|
என்பதுபற்றி அந்நாட்டின்கண் மக்கள் வருந்தாமற் பெறாநின்ற வளம் கூறப்படுகின்றது. மேல்வரும் 58 - 60-61. 62. 63- ஆம் செய்யுள்களும் இன்ன.
|
( 28 ) |
| 58 |
சோர்புயன் முகிற்றலை விலங்கித் தூநில |
| |
மார்புகொண் டார்ந்தது நரல வண்சுளை |
| |
யார்வுறு பலாப்பழ மழிந்த நீள்களம் |
| |
போர்வினான் மலிந்துடன் பொலிந்த நீரவே. |
|
|
(இ - ள்.) புயல்சோர் முகில் தலைவிலங்கி - நீரைப் பொழியும் முகிலைத் தலைச்சென்று தடுக்குமாறு; தூநிலம் மார்புகொண்டு ஆர்ந்து - தூய நிலத்தின் மார்பையெல்லாம் தமக்கு இடமாகக்
|
|