| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
383 |
|
| 662 |
எரிமலர்ப் பவளச் செவ்வா |
| |
யின்னரம் புளர மைந்தர் |
| |
புரிநரம் பிசைகொள் பாட |
| |
லுடைந்தனர் பொன்ன னாட்கே. |
|
|
(இ - ள்.) திருமலர்க் கமலத்து அங்கண் தேனினம் முரல்வது ஒப்ப - அழகிய தாமரை மலரிலே தேனினம் பாடுந்தன்மைபோல; விரிமலர்க் கோதை பாட - மலர்ந்த பூங்கோதையாள் பாட; எழால் வகை வீரர் தோற்றார் - யாழ் வாசித்தலில் அந்தணர் தோற்றனர்; எரிமலர்ப் பவளச் செவ்வாய் இன்நரம்பு உளர - முருக்கிதழையும் பவளத்தையும் போன்ற செவ்வாயினாள் இனிய யாழ் நரம்பைத் தடவ; புரிநரம்பு இசைகொள் பாடல் மைந்தர் பொன்னனாட்கு உடைந்தனர் - அந் நரம்பின் இசையைக் கொண்ட கண்டப் பாடலில் அந்தணர் திருவனாளுக்குத் தோற்றனர்.
|
|
|
(வி - ம்.) 'அந்தணாளர்க் கரசு வரைவின்றே' (தொல், மரபு. 82) என்றதனால், 'வீரர் ' என்றார்.
|
|
|
வீரர் என்றது இகழ்ச்சி. பாடல் - மிடற்றுப் பாடல். பொன்னனாள் - தத்தை. அரசர் குலத்தினும் உயர்ந்தோராதல் பற்றி ஒத்த குலத்தரசருள் ஒருவரேனும் வெல்லாமை கண்டபின் அந்தணரைப் பாட விடுத்தனர் என்று கருதுக.
|
( 170 ) |
| 663 |
வாலரக் கெறிந்த காந்தண் |
| |
மணியரும் பனைய வாகிக் |
| |
கோல்பொரச் சிவந்த கோலக் |
| |
குவிவிரன் மடந்தை வீணை |
| |
நூல்பொரப் புகுந்த நுண்ணூல் |
| |
வணிகருந் தொலைந்து மாதோ |
| |
கால்பொரக் கரிந்த காமர் |
| |
பங்கயப் பழன மொத்தார். |
|
|
(இ - ள்.) வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகி - தூய அரக்கை ஊட்டின, காந்தளின் அழகிய அரும்பைப் போன்றனவாகி; கோல் பொரச் சிவந்த - (மேலும்) நரம்பைத் தடவுதலாலே சிவந்த; கோலக் குவிவிரல் மடந்தை வீணை - அழகிய குவிந்த விரலையுடைய தத்தையின் வீணைப் போருக்கு; நூல் பொரப் புகுந்தநுண் நூல் வணிகரும் தொலைந்து - இசை நூலோடே வாசிக்கத் தொடங்கிய நுண்ணிய பூணு நூலையுடைய வணிகரும் தோற்று; கால் பொரக் கரிந்த
|
|