| நாமகள் இலம்பகம் |
39 |
|
|
கொண்டு நிற்பதனால் ; அது நரல - அந்நிலம் பொறுக்கமாட்டேன் என்று வாய்விடும்படி ; வண்சுளை ஆர்புஉறு பலாப்பழம் அழிந்த நீள்களம் - செழுவிய சுளைகள் நிறைந்த பலாப்பழங்கள் அழிந்துகிடந்த நீண்ட களங்கள்; போர்பினால் உடன்மலிந்து பொலிந்த நீர - போர்களால் மிக்குப் பொலிந்த இயல்பின.
|
|
|
(வி - ம்.) புயல் - நீர், விலங்கி : விகாரம் ; விலங்க என்க. பழம் : களத்திற்கு அடை. நிலத்திற்குக் களம் சினையாம்.
|
|
|
இனி, 'நிலத்திலே முகிலை விலக்கிப் பழைய கூடுகள் 1நிறைதல் கொள்கையாலே , அங்ஙனம் அவை நிறைந்த நிலம் இப்பொழுது இடுகின்ற போரைப் பொறேன் என்று வாய்விடும்படி' என்றுமாம். ஆர்பு கொண்டெனவே கூடுகள் பெற்றாம்.
|
|
|
முதலிற் கூறிய பொருளுக்கு மார்பு எனவும், இரண்டாம் பொருளுக்கு ஆர்பு எனவும் பிரிக்க. 'ஆர்பு கொண்டு' என்பதற்குக் 'கூடுகள்' தோன்றா எழுவாய்.
|
( 29 ) |
| 59 |
ஈடுசால் போரழித் தெருமைப் போத்தினான் |
| |
மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச் |
| |
சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள் |
| |
கோடுயர் கொழும்பொனின் குன்ற மொத்தவே. |
|
|
(இ - ள்.) ஈடுசால் போர் அழித்து - பெருமை நிறைந்த போரைத் தலையைத் தள்ளி; எருமைப் போத்தினால் மாடுஉறத்தெழித்து - எருமைக் கடாக்களினாற் பக்கத்தே உற உரப்பி ; வைகளைந்து - வைக்கோலைக் களைந்து; கால்உறீஇச் சேடுஉறக் கூப்பிய செந்நெற் குப்பைகள் -காற்றில் தூற்றி உயரமாகக் குவித்த செந்நெற் பொலிகள் ; கோடு உயர் கொழும்பொனின் குன்றம் ஒத்த - முடிஉயர்ந்த வளமிகு பொன்மலை போன்றன.
|
|
|
(வி - ம்.) ஈடு - இடுதலுமாம். 'பெற்றம் எருமை புலி மரை புல்வாய் - மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே' (தொல் - மரபு - 41.)
|
( 30 ) |
| 60 |
கரும்புக ணுடைப்பவ ராலை தோறெலாம் |
| |
விரும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய |
| |
திருந்துசா றடுவுழிப் பிறந்த தீம்புகை |
| |
பரந்துவிண் புகுதலிற் பருதி சேந்ததே. |
|
|
(இ - ள்.) கரும்பு கண் உடைப்பவர் ஆலைதோறும் விரும்பி வந்து அடைந்தவர் எலாம் பருகி - கரும்பைச் சாறு கொள்வாருடைய ஆலைதோறும் விரும்பி வந்து சேர்ந்தவரெல்லோரும் பருகி ; விஞ்சிய திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம்புகை - மிக்க
|
|
|
|
1. நிறைதல் கொள்கையால் - நிறைந்திருப்பதனால்.
|
|