பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 391 

னோர். ஈண்டு இவர் தன்மை உரைப்பிற் பெருகும். 1.'கூத்தின் வகையுங்குறைழற நோக்கின் - ஏத்தும் வகையான் இருவகைப் படுமே'

 

   2.'அவைதாம், சாந்திக் கூத்தே விநோதக் கூத்தென் றாய்ந்துற வகுத்தனன் அகத்தியன் தானே' சாந்திக் கூத்தே தலைவன் இன்பம் - ஏந்திநின்றாடிய ஈரிரு நடமிவை - சொக்கம் மெய்யே அவிநயம் நாடகம் - என்றிப்பாற்படூஉம் என்மனார் புலவர்” 3.சொக்கமாவது : சுத்த நிருத்தம்; அது நூற்றெட்டுக் கரணமுடைத்து. மெய்க் கூத்தாவது : தேசி, வடுகு, சிங்களம்; இவை மெய்த் தொழிற் கூத்தாதலிற் காரணப் பெயர். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் அகச் சுவைபற்றி ஆடுதலின் அகமார்க்கம் எனப்படும். 'அகத்தெழு சுவையான் அகமெனப் படுமே' (சயந்தம்). அவிநயமாவது : கதை தழுவாதே பாட்டுக்களின் பொருள் தோன்றக் கைகாட்டி அவிநயிப்பது. நாடகமாவது - கதை தழுவி வருங்கூத்து. இங்குக் காண்பது நாடகம்.

( 180 )

1. சிலப். 3 : 1 - 94 அடிகளிற் காண்க.

 

2. சிலப். 3 - 12. அடியார். மேற்.

 

3. சிலப். 3 - 12. அடியார் - உரை.

 
673 நிலமறிந் தணிக வையன் சீவகன் நெறியி னென்ன
நலநுதற் பட்டங் கட்டி நகைமுடிக் கோதை சூட்டி
யலர்முலைக் குருதிச் சாந்து மாரமும் பூணுஞ் சோ்த்திக்
குலவிய குருதிப்பட்டிற் கலைநலங்கொளுத்தி யிட்டான்.

   (இ - ள்.) ஐயன் சீவகன் நிலம் அறிந்து நெறியின் அணிக என்ன - ஐயனாகிய சீவகன் அரங்கை யறிந்து நூல் நெறியால் அணிக என்று நடையறி புலவர் கூற, (அவனும்); நலம் நுதற்பட்டம் கட்டி - அழகிய நெற்றியிலே படடத்தைக் கட்டி; நகைமுடிக் கோதை சூட்டி - ஒளிவிடும் முடிமீது கோதையைச் சூட்டி; அலர்முலைக் குருதிச் சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி - வளரும் முலைகளின் மீது செஞ்சாந்தையும் முத்துமாலையையும் பிற அணிகலன்களையும் அணிவித்து; குலவிய குருதிப் பட்டின் கலைநலம் கொளுத்தியிட்டான் - விளங்கிய செம்பட்டினாலே கலையின் நலத்தைப் பொருத்திவிட்டான்.

 

   (வி - ம்.) வளர்கின்ற முலையெனவே பன்னிரண்டாமாண்டாயிற்று. 'வட்டணையுந் தூசியும் மண்டலமும் பண்ணமைய - எட்டுடனீரிரண்டாண் டெய்தியபின் - கட்டளைய - கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச் - சோதித் தரங்கேறச் சூழ்' (பரத சேனாபதீயம்) குருதிச் சாந்து - குங்குமச் சாந்து.

( 181 )
674 திருவிலே சொரிந்து மின்னுங்
  குண்டலஞ் செம்பொ னோலை
யுருவுகொண் மதிய மன்ன
  வொளிமுகஞ் சுடர வாக்கிப்