|
(வி - ம்.) மார்ச்சனை முதலியவு முளதாய், 'இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய், நடப்பது தோலியற் கருவியாகும்' என்ற ஓசையும் உடைத்தாய், வெண்கலத்தாற் செய்ததென்பது தோன்றப் பொலிதல்' கூறினார். ”கருங்காலி செங்காலி வேம்பு பலாக் கஞ்சம் - நெருங்கிய சீர்க்குரா மண்ணாம் - பொருந்தவே - ஊன மிலவாய் உயர்நிலத்தில் தோன்றிலாம் - மானின் விழிமடவாய் வைப்பு” துளைபயில் குழல் - துளையிடத்தே வாச்சியமும் யாழ்ப் பாடலும் கண்டப் பாடலும் பயிலப்பட்ட முதல் வங்கியமும் வழிவங்கியமும். ”ஓங்கிய மூங்கில் உயர்சந்து வெண்கலமே - பாங்குறுசெங்காலி கருங்காலி - பூங்குழலாய் - கண்ணன் உவந்த கழைக்கிவைக ளாமென்றார் - பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து” ஏங்க - இவை மூன்றும் கூடி யிசைப்ப. இவை ஆமந்திரிகையாம் : 'குழல்விழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர் - முழவியம்பலாமந்திரிகை.' போந்து - வலக்கால் முன்மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து. கைத்தலங்காட்டுதல் கமல வர்த்தனை, (இது கமல வட்டணையெனவும் வழங்கும்.) மேற்பட வெருவி நோக்கி - தெய்வத்தை நோக்குதலின் மேலேயெழ வெருவிப் பார்த்து. தானை - கரந்து வரல் எழினி. 'வழுவில் கேள்வி நன்னூ லுணர்ந்தோர் - எழினி தானே மூன்றென மொழிப.' 'அவைதாம், ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் - கரந்து வரல் எழினியும் எனமூ வகையே'; இராசதானியிலும் அரங்கிலும் கோலம் மறைத்துவரும் இடத்திலும் இட்ட திரைகள்.
|
( 183 ) |