காந்தருவ தத்தையார் இலம்பகம் |
395 |
|
வேறு
|
|
679 |
அகிலார் புகையலாற் சாந்தணியாள் |
|
பூச்சாரச் செல்லாள் செல்லிற் |
|
பகலே பகைவளர்த்த பாவை |
|
சிறுநுசுப் பொன் றுண்டே பாவம் |
|
இகலேந் திளமுலைமேற் சாந்தெழுதி |
|
முத்தணிந்து பூவுஞ் சூட்ட |
|
முகிலேந்து மின்மருங்குல் மொய்குழற்றா |
|
யிதுகண்டு முளளே பாவம். |
|
(இ - ள்.) அகிலார் புகை அலால் சாந்தணியாள் - (இவள்) அகிற்புகை அன்றிச் சந்தனமும் பூசாள்; பூச்சாரச் செல்லாள் - பூவின் அருகேயும் செல்லாள்; செல்லின் பகலே பகைவளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே - செல்வாளெனின் (அம்மாலையும் சாந்தும் தாங்குதற்குத் தக்கதாக) வெளியாகவே முலைகளாகிய பகையை வளர்த்த சிறிய இடையதொன்று பாவைக்கு இருக்கின்றதோ? (இல்லையே); பாவம்! - ஈதொரு பாவம் இருந்தபடி!; இகல் ஏந்து இளமுலைமேல் சாந்து எழுதி - (இத் தன்மை யறிந்தும்) மாறுபடுதலை மேற்கொண்ட இளமுலைகளின்மேற் சாந்தால் எழுதி; முத்து அணிந்து - முத்தையும் அணிந்து ; பூவும் சூட்ட - மலரையும் அணிய; மின் மருங்குல் முகில் ஏந்தும் மொய்குழல் - மின்னிடையின் மேல் முகிலையேந்திய மொய்குழலையுடையாளின்; தாய் இது கண்டும் உளளே - அன்னை இக் கொடுமையைக் கண்டும் உயிருடன் இருக்கின்றனளே!; பாவம்! - ஈதொரு பாவம் இருந்தபடி என்னே!.
|
|
(வி - ம்.) இப் பாவைக்கு நுசுப்பில்லை; இத்தன்மை யறிந்து வைத்தும் இவள் முலைமேலே எழுதவும் சூட்டவும் கண்டு இவள் தாய் எங்ஙனம் பொறுத்தாள்; இஃதொரு பாவம், என்று இரங்கினர் என்றவாறு.
|
( 187 ) |
வேறு
|
|
680 |
தேந்தாமஞ் செம்பவளத் தாமஞ் செம்பொன் |
|
னெரிதாம மின்னுத் திரடா மங்க |
|
டாந்தாந் தாமெனத் தாழ்ந்தபொன் மேகலைத் |
|
தாம வரங்கின்மேற் றாதார் முல்லைப் |
|
பூந்தாமக் கொம்பாடக் கண்டா ரெல்லாம் |
|
புனமயிலே யன்னமே பொன்னங் கொம்பே |
|
யாந்தா மரைமகளே யல்ல ளாயி |
|
னமரர்மக ளென்பாரு மாயி னாரே. |
|