| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
408  | 
  | 
| 
    இமைத்து விழிப்பதென்றார் ஆரமசையுந்தோறும் விட்டுவிட்டொளிர் தலான். விரை - நறுமணப் பொருள். நுரையை ஆடையாக்கிக் கிழித்தாற் போன்ற நொய்ம்மையுடைய நுண்துகில் என்க. உரை கிழித்து என்றது சொல்லை அகற்றி என்றவாறு. சொல்லாற் சொலப்படாமல் மனத்தான் மட்டும் உணர்வதாகிய ஒப்பு என்க. 
 | 
( 207 ) | 
|  700 | 
அரக்குநீ ரெறியப் பட்ட வஞ்சனக் குன்ற மன்ன |  
|   | 
திருக்கிள ரோடை சூழ்ந்த செம்புகர் நெற்றித் தாகி |  
|   | 
யுருக்கியூ னுண்ணும் வேகத் துறுபுலி யனைய நாக |  
|   | 
மருக்கனோர் குன்றஞ் சோ்ந்தாங் கண்ணறா னேனி னானே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) திருகிளர் ஓடை சூழ்ந்த செம்புகர் நெற்றித்து ஆகி - அழகு பொருந்திய முகபடாம் அணிந்த சிவந்த புள்ளிகளையுடைய நெற்றியதாதலின்; அரக்கு நீர் எறியப்பட்ட அஞ்சனக் குன்றம் அன்ன நாகம் - செவ்வரக்கு நீரைச் சிதறிய கருமலை போன்ற யானைமேல்; ஊன் உருக்கி உண்ணும் வேகத்து உறுபுலி அனைய அண்ணல் - ஊனை உருக்கித் தின்னும் விரைவினையுடைய வலிமிகு புலியைப் போன்ற சீவகன்; அருக்கன் ஓர் குன்றம் சேர்ந்தாங்கு ஏனினான் - ஞாயிறு ஒரு மலையை அடைந்தாற்போல ஏறினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) அரக்குநீர் - சாதிலிங்கக் குழம்பு. அஞ்சனக்குன்று - கரிய மலை. செம்புகர் - செம்புள்ளிகள். உறுபுலியனைய அண்ணல் அருக்கன் குன்றம் சேர்ந்தாங்கு நாகம் ஏறினான் என இயைத்துக்கொள்க. 
 | 
( 208 ) | 
|  701 | 
விடுகணை விசையின் வெய்ய விளங்கொளி யிவுளித் திண்டோ் |  
|   | 
கடுநடைக் கவரி நெற்றிக் காலியற் புரவி காய்ந்து |  
|   | 
வடிநுனை யொளிறு மாலை வாட்படை மறவர் சூழ |  
|   | 
வடுதிரைச் சங்க மார்ப்ப வணிநகர் முன்னி னானே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) விடுகணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளித் திண் தேர் - விடும் அம்பின் வேகம் போன்ற விரைவினையுடைய விரும்பத்தக்க விளக்கமான ஒளியையுடைய புரவிகள் பூட்டிய தேரும்; கடுநடைக் கவரி நெற்றிக் கால் இயல் புரவி - விரைந்த செலவையும் கவரியுடைய நெற்றியையும் உடைய காற்றைப் போன்ற இயல்புடைய புரவியும்; காய்ந்து வடிநுனை ஒளிரும் மாலை வாள்படை மறவர் - காய்ந்து வடித்த முனை விளங்கும், மாலையணிந்த வாட்படை யேந்திய வீரரும்; சூழ - சூழ்ந்துவர; அடுதிரைச் சங்கம் ஆர்ப்ப - கரையைத் தாக்கும் அலைகளையுடைய கடல்தந்த சங்குகள் முழங்க; அணிநகர் முன்னினார் - சென்று அழகிய யாழ் மண்டபத்தை அடைந்தனர். 
 | 
  | 
| 
    (வி - ம்.) மங்கலத்திற்குச் சங்கு கூறினார். 
 | 
  |