காந்தருவ தத்தையார் இலம்பகம் |
424 |
|
கோயான் - காரால் காடுகள் மலர்ந்தன என்று கூறுவேனோ நான்?; கானம் பூத்த கார் கண்டு - காடு மலர்ந்த கார்காலங் கண்டு; தேனார் கோதை பரிந்து அழுங்கும் என்கோ யான் - தேன் பொருந்திய மாலையாள் வருந்தி அழுவாள் என்பேனோ நான்?
|
|
(வி - ம்.) இத் தாழிசைக் கொச்சக ஒருபோகுகள் கந்தருவ மார்க்கத்தால் இடை மடங்கின. மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.
|
( 234 ) |
வேறு
|
|
727 |
அண்ணல்யாழ் நரம்பை யாய்ந்து |
|
மணிவிர றவழ்ந்த வாறும் |
|
பண்ணிய விலயம் பற்றிப் |
|
பாடிய வனப்பு நோக்கி |
|
விண்ணவர் வீணை வீழ்த்தார் |
|
விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் |
|
மண்ணவர் மருளின் மாய்ந்தார் |
|
சித்தரு மனத்துள் வைத்தார். |
|
(இ - ள்.) அண்ணல் மணிவிரல் யாழ் நரம்பை ஆய்ந்து தவழ்ந்த ஆறும் - தலைவனின் அழகிய விரல் யாழ் நரம்பை ஆராய்ந்து வாசித்த வகையும்; பண்ணிய இலயம் பற்றிப் பாடியவனப்பும் நோக்கி - அதில் தான் இசைத்த செலவைக் குறிக்கொண்டு மிடற்றாற் பாடிய வனப்பையும் உணர்ந்து; விண்ணவர் வீணை வீழ்த்தார் - கின்னரர் வீணையைக் கைவிட்டார்; விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் - வித்தியாதரர் நெஞ்சுருகி மெய்ம்மறந்தனர்; மண்ணவர் மருளின் மாய்ந்தார் - மக்கள் தாம் அறியாத இசையைக் கேட்டதாலே மயங்கி அறிவிழந்தனர்; சித்தரும் மனத்துள் வைத்தார் - இருடிகளும் இதுவும் பேரின்பமே யென வுளத்தமைத்தனர்.
|
|
(வி - ம்.) இதனாற் சீவகனுடைய யாழ் வாசிப்பும் மிடற்றுப் பாடலும் சிறந்தன ஆமாறு காட்டப்பட்டது.
|
( 235 ) |
727 |
வீழ்மணி வண்டு பாய்ந்து |
|
மிதித்திடக் கிழிந்த மாலை |
|
சூழ்மணிக் கோட்டு வீணைச் |
|
சுகிர்புரி நரம்பு நம்பி |
|
யூழ்மணி மிடறு மொன்றாய்ப் |
|
பணிசெய்த வாறு நோக்கித் |
|
தாழ்மணித் தாம மார்பிற் |
|
கின்னரர் சாம்பி னாரே. |
|