| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
428 |
|
|
(இ - ள்.) கரும்பு ஆர் தீஞ் சொல்லினாய் - கரும்பனைய இனிய மொழியாய்!; அரும்பு ஏர் வனம் முலையும் - அரும்பனைய அழகிய முலைகளும்; ஆடு அமைமென் தோளும் - அசையும் மூங்கிலைப் போன்ற மெல்லிய தோளும்; திருந்து ஏர் பிறை நுதலும் - திருத்தமுற்ற பிறையனைய அழகிய நெற்றியும்; செம்பசலை மூழ்க - சிவந்த பசலையிலே அழுந்துமாறு; நெருங்கு ஆர்மணி அருவி - நெருங்கிப் பெருகும் மணி போன்ற நீரையுடைய அருவி; நீள்வரை மேல் மின்னும் - நீண்ட மலையின் மேலே ஒளிரும்; கேள்வர் காணார் கொல் - இதனை அன்பர் அறியாரோ?
|
|
|
(வி - ம்.) மணி அருவி தெளிந்ததெனவே காலம் வேனிலாயிற்று.
|
( 242 ) |
வேறு
|
|
| 735 |
பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கை |
| |
மண்ணொன்று மெல்விரலும் வாள்நரம்பின் மேல்நடவா |
| |
விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி |
| |
எண்ணின்றி மாதர் இசைதோற் றிருந்தனளே. |
|
|
(இ - ள்.) பண் ஒன்று பாடலது ஒன்று - பாடின பாட்டும் அதற்கு ஏற்ற யாழும் ஒருதிறமாய் இருந்தன; பல் வளைக்கை மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின்மேல் நடவா - பல வளையல்கள் அணிந்த கையாளின் கழுவப் பெற்ற மெல்லிய விரலும் ஒள்ளிய நரம்பின்மேல் நடவா; வீணை நின்று இயங்கிய மிடறும் நடுநடுங்கி - கருவியொழிந்த பாட்டும் வானிலே நின்று இயங்கி அக்காலத்தே நடுங்குவதனாலே; மாதர் எண் இன்றி இசைதோற்று இருந்தனளே! - தத்தை நினைவிழந்து இசைக்குத் தோற்று இருந்துவிட்டாள்.
|
|
|
(வி - ம்.) பண் ஒன்று பாடல் அது ஒன்று; இவள் பாடின பாட்டும் யாழிசையும் ஒரு திறமாயிருந்தன; அவன் பாடின பாட்டும் யாழிசையும் மற்றொரு திறமாயிருந்தன என்றுமாம். அவன் பாடும்போது இவள் யாழ் நரம்பு ஒழுங்காக இசைக்கவில்லை; அவன் யாழிசைக்கும் போதும் இவள் ஒழுங்காகப் பாடவில்லை.
|
|
|
மண்ணுதல் - பண்ணுதல் (தூய்தாக்குதல்); 'ஆவுதி மண்ணி' (மதுரைக். 494) என்றார் பிறரும். விண்ணென்றது முற்கூறிய உள்ளாளப் பாட்டிற்குரிய மூலாதாரந் தொடங்கிப் பிரமரந்திரத்தளவு நின்ற வெளி. 'நடுநடுங்கி' என்பது கம்பிதப் பட்டு.
|
|
| |
”எடுத்தல்பாட் டுச்சமாம்; எண்படுத்தல் மந்தம்; |
|
| |
தடுத்து நலிதல் சமமாம்; - தொடுத்தியன்ற |
|
| |
தள்ளாத கம்பிதம் தான்நடுக்கல்; நற்குடிலம் |
|
| |
உள்ளாளப் பாடல் உணர்.” |
|
|