பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 438 

   கைக்கிளையாய் அது புணர்ச்சிக்குச் சிறப்பின்மை யுணர்ந்திலீராதலின் நீர் கற்ற இயலும் கெடுக என்றான். வாழ்க! என்பது இகழ்ச்சி.

( 257 )
750 நாறுமும் மதத்தி னாலே
  நாகத்தை யிரிக்கும் நாக
மாறிய சினத்த தன்றி
  யதிங்கத்தின் கவளங் கொண்டால்
வேறுநீர் நினைந்து காணீர்
  யாவர்க்கும் விடுக்க லாகா
நாறித்தே னொழுகுங் கோதை
  நம்பிக்கும் அன்ன ளென்றான்.

   (இ - ள்.) நாறும் மும்மதத்தி னாலே நாகத்தை இரிக்கும் நாகம் - மணங் கமழும் தன் மும் மதத்தாலே மற்றை யானைகளை ஓட்டும் ஒரு களிறு; ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால் - மிக்க சினத்துடன் அதிமதுரத் தழையைக் கவளமாகக் கையிலே கொண்டால்; யாவர்க்கும் விடுக்கல் ஆகா - அக்குளகை எவராலும் கொள்ளுதல் அரிது; நாறித்தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் - மணங் கமழ்ந்து தேன் பெருகும் கோதையாள் நம்பிக்கும் அத் தகையள்; வேறு நீர் நினைந்து காணீர் என்றான் - நீவிர் தனியே ஆராய்ந்து காண் மின் என்றான.

 

   (வி - ம்.) குளகுபோல் மதத்தை விளை விப்பவள் இவளும் ஆதலின், விடுத்தல் அரிது என்றான்.

 

   நாகம் - யானை. அதிங்கம் - அதிமதுரத்தழை. வேறு நீர் நினைந்து காணீர் என்றது நீயிர் எண்ணாது துணிகின்றீர் என்று இகழ்ந்த படியாம்.

( 258 )
751 இளவள நாகு புல்லி யினத்திடை யேறு நின்றா
லுளவளங் கருதி யூக்க லுழப்பெரு துடைய தாமே
தளவள முகைகொள் பல்லாட் சீவகற் றழுவி நின்றாற்
கொளவுளைந் தெழுவ தல்லாற் கூடுத னுங்கட் காமோ.

   (இ - ள்.) வள இள நாகு புல்லி ஏறு இனத்திடை நின்றால் - அழகிய இளநாகைத் தழுவி ஒரு காளை தன் திரளிலே நின்றால்; உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருதினுக்கும் ஆமோ? - அதற்குரிய அழகை நுகரக் கருதி முயறல் உழுது களைத்த எருதுக்கும் இயலுமோ?; வளத் தள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால் - அழகிய முல்லையரும்பினைக் கொண்ட முறுவலாளைச் சீவகன் தழுவி நின்றால்; கொள உளைந்து எழுவது