| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
442  | 
  | 
| 
 எய்திட்டு - அது கல் திரளைக் கழிந்து மண்ணிலே மறைய எய்து காட்டி; எமர் கல்வி இற்று என்றான் - எங்கள் கல்வியெல்லாம் இத்தகையது என்றான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) அச்சமே கீழ்களது ஆசாரம் என்பதுபற்றி எம்மாற்றல் இற்று என்று கண் கூடாக் காட்டினன் என்பது கருத்து. 
 | 
( 264 ) | 
|  757 | 
ஆழியங் கழனி தன்னு |  
|   | 
  ளம்பொடு கணையம் வித்திச் |  
|   | 
சூழ்குடர் பிணங்கண் மல்க |  
|   | 
  விளைத்தபின றொழுதிப் பல்பேய்க் |  
|   | 
கூழ்படு குருதி நெய்யி |  
|   | 
  னிறைச்சிச்சோ றூட்டி வென்றி |  
|   | 
வீழ்தர வேட்டு நின்றா |  
|   | 
  ரெய்துப வெகுளல் வேண்டா. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆழி அம் கழனி தன்னுள் - சக்கர வியூகமாக வகுத்த படையாகிய விளைநிலத்தே; அம்பொடு கணையம் வித்தி - அம்பையுந் தண்டாயுதத்தையும் விதைத்து; சூழ்குடர்ப் பிணங்கள் மல்க விளைத்தபின் - குடர்கள் சூழ்ந்த பிணங்களாகிய நெல்லை நிறைய விளைவித்தபிறகு; ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சிச் சோறு பல் பேய்க்கு ஊட்டி - முறைமைப்படியுள்ள, குருதி நெய்யுடன் ஊன் சோற்றைப் பல பேய்களுக்கும் உண்பித்து; வென்றி வீழ்தர வேட்டு நின்றார் எய்துப - வென்றிமகள் விரும்பக் களம் கொண்டு நின்றவர்கள் இவளை அடைவர்; வெகுளல் வேண்டா - நீவிர் வீணே சினவுதல் வேண்டா. 
 | 
  | 
| 
    (வி - ம்.) இவை இரண்டும் தண்டம். 
 | 
( 265 ) | 
|  758 | 
போர்ப்பறை முழங்கி யெங்கும் |  
|   | 
  பொருவளி புடைக்கப் பட்ட |  
|   | 
கார்க்கடல் போன்று சேனை |  
|   | 
  கலக்கமோ டூரறி யார்ப்பத் |  
|   | 
தார்ப்பொலி மார்ப னோர்த்துத் |  
|   | 
  தன்கையில் வீணை நீக்கி |  
|   | 
வார்ப்பொலி முலையி னாட்கு |  
|   | 
  வாய்திறந் திதனைச் சொன்னான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பொருவளி புடைக்கப்பட்ட கார்க்கடல் போன்று - மோதுகின்ற காற்றினால் தாக்கப் பெற்ற கரிய கடலைப் போல; எங்கும் போர்ப் பறை முழங்கி - எங்கும் போர் முரசு 
 | 
  |