பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 444 

வண்ண மாக்கவின் மாய்ந்தது - அப்போது சொல்லுடன் அவளது அழகு அறுதியாகக் கெட்டது.

 
761 மேவி நம்பிக்கு வெம்பகை யாக்கிய
பாவி யேனுயிர் பாழுடல் பற்றுவிட்
டாவி யோநட வாயென் றழுதுதன்
காவி வாட்கண் கலங்க வதுக்கினாள்.

   (இ - ள்.) நம்பிக்கு மேவி வெம்பகை ஆக்கிய பாவியேன் - நம்பிக்கு உறவாக வந்து கடிய பகையை விளைவித்த பாவியேனுடைய; உயிர் பாழுடல் பற்றுவிட்டு நடவாய் - உயிரே! நீ பாழுடலைக் கைவிட்டுப் போகாய்; ஆவியோ என்று அழுது - நீயும் ஓர் ஆவியோ என்று அழுது; தன் காவி வாள் கண் கலங்க அதுக்கினாள் - தன்னுடைய காவியனைய ஒளிமிகுங் கண்கள் கலங்குமாறு அடித்துக்கொண்டாள்.

 

   (வி - ம்.) 'பாவியேனது பாழுடல்' என்றும் பாடம். இப் பாடமே சிறப்புடைத்து.

( 269 )
762 பாழி நம்படை மேலதிப் பாரெலா
நூழி லாட்டி நுடக்கிக் குடித்திடும்
வாழி நங்கைகண் டாயென்று வாட்கணீர்
தோழி தூத்துகிற் றோகையி னீக்கினாள்.

   (இ - ள்.) நங்கை! வாழி! - நங்கையே! வாழ்க!; பாழி நம்படை மேலது - வலிமிகும் நம்முடைய படை மேம்பட்டு நின்றது; இப் பாரெலாம் நூழில் ஆட்டி நுடக்கிக் குடித்திடும் - இஃது இவர்களையே அன்றி இவ்வுலகில் உள்ளோரை யெல்லாம் கொன்று குவித்து ஒன்றாக்கிக் கரைத்துக் குடித்திடும்; கண்டாய் என்று - இதனை நீ அறிவாயாக என்றுரைத்து; தோகையின் வாள்கண் நீர் தூத்துகில் தோழி நீக்கினாள் - தத்தையின் வாட்கண் நீரைத் தூய ஆடையினால் தோழி துடைத்தாள்.

 

   (வி - ம்.) தோகை - முன்றானையுமாம்.

( 270 )
763 எங்கள் பெண்மையு மீர்மலர்த் தார்மன்னர்
தங்க ளாண்மையுஞ் சால்வது காண்டுமென்
றிங்கு வார்முர லுங்கலை யேந்தல்கு
னங்கை வாட்படை நங்கையைச் குழ்ந்ததே.

   (இ - ள்.) எங்கள் பெண்மையும் ஈர் மலர்த்தார் மன்னர் தங்கள் ஆண்மையும் - எங்கள் பெண் தன்மையினும் குளிர்ந்த மலர்த்தார் வேந்தர்களின் ஆண் தன்மையினும்; சால்வது