| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
445  | 
  | 
| 
 காண்டும் என்று - சிறப்புடையது அறிவோம் என்று; இங்கு வார் முரலும் கலை - இவ்விடத்தில், நீண்ட, ஒலிக்கும் மேகலையை; ஏந்து அல்குல் - ஏந்திய அல்குலையுடைய; நங்கை வாள்படை - தத்தையின் வாளேந்திய பெண்படை; நங்கையைச் சூழ்ந்தது - தத்தையைச் சூழ்ந்து நின்றது. 
 | 
  | 
| 
    (வி - ம்.) இங்கு என்பது தத்தை யிருக்கும் இடம். 
 | 
( 271 ) | 
வேறு
 | 
  | 
|  764 | 
கூன்களுங் குறளு மஞ்சிக் |  
|   | 
  குடர்வெந்து கொழும்பொற் பேழை |  
|   | 
தான்கொளப் பாய வோடிச் |  
|   | 
  சாந்துக்கோய் புகிய செல்வ |  
|   | 
தேன்கொள்பூ மாலை சூடித் |  
|   | 
  தாமமாய்த் திரண்டு நிற்ப |  
|   | 
வான்பளிங் குருவத் தூணே |  
|   | 
  மறைபவு மாய வன்றே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கூன்களும் குறளும் அஞ்சிக் குடர் வெந்து - (படையெழுச்சி கண்ட) கூனும் குறளும் நடுங்கிக் குடல் தீய்ந்து; கொழும் பொன் பேழை தான் கொளப் பாய ஓடி - வளமிகும் பொன் பெட்டி தங்களை உள்ளடக்கிக் கொள்ளுமென்று கருதி அதனுள்ளே பாய்கைக்கு ஓடியும்; சாந்துக் கோய் புகிய செல்வ - சாந்திருந்த பரண்களிலே புகுதற்குச் செல்வனவும்; தேன் கொள் பூமாலை சூடித் தாமமாய்த் திரண்டு நிற்ப - தேனுற்ற மலர் மாலைகளை அணிந்து மாலை வடிவமாகத் திரண்டு நிற்பனவும்; வான்பளிங்கு உருவத்தூணே மறைபவும் ஆய - சிறந்த பளிங்கினாலாகிய அழகிய தூணிலே மறைவனவும் ஆயின. 
 | 
  | 
| 
    (வி - ம்.) இச்செய்யுள் இனிய நகைச்சுவைக்கு இடனாதலுணர்க. இந்நிகழ்ச்சியைக் கண்ட சீவகன் முறுவலித்தலை அடுத்த செய்யுளிற் காண்க. 
 | 
( 272 ) | 
|  765 | 
இங்கித நிலைமை நோக்கி |  
|   | 
  முறுவலித் தெரிபொன் மார்ப |  
|   | 
னங்கையைக் காக்கும் வண்ண |  
|   | 
  நகாநின்று மொழிந்து பேழ்வாய்ச் |  
|   | 
சிங்கந்தான் கடிய தாங்கோர் |  
|   | 
  செழுஞ்சிங்க முழுக்கிற் சீறிப் |  
|   | 
பொங்கிமேற் செல்வ தேபோற் |  
|   | 
  பொலங்கழ னரலச் சென்றான். | 
 
 
 |