| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
447 |
|
|
(இ - ள்.) வட்டு உடை மருங்குல் சேர்த்தி - வட்டுடையை இடையிற் கொண்டு; வாள் இருபுடையும் வீக்கி - உடைவாள்களை இருமருங்கினும் கட்டி; தட்டு உடைப் பொலிந்த திண்தோத் தனஞ்செயன் போல ஏறி - தட்டினையுடைய பொலிவுற்ற திண்ணிய தேரிலே அருச்சுனன்போல அமர்ந்து; கட்டளைப்புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி - பண்ணுறு புரவிகளின் மேல் அமர்ந்து, சூழவந்து, தேரின் ஆழியைக் காக்குமாறு பணித்து; உயிர் அட்டுப் பருகும் கூற்றம் - உயிரைக் கொன்று தின்னும் கூற்றுவன்; கோள் எழுந்தனையது ஒத்தான் - கொல்லு தலைக் கருதி எழுந்தாற் போன்றது போன்றான்.
|
|
|
(வி - ம்.) வட்டுடை - போர்மறவர்க்குரிய ஒருவகை ஆடை; முழந்தாளளவாகச் செறிய உடுத்தும் உடை என்க.
|
( 275 ) |
| 768 |
புள்ளிரைப் பன்ன பொற்றார்ப் |
| |
புரவித்தே ரிரவி போலா |
| |
வுள்ளுருத் தெழுந்து பொங்கி |
| |
யுடல்சினங் கடவ நோக்கி |
| |
முள்ளெயி றிலங்க நக்கு |
| |
முடிக்குழா மன்னர் கேட்பக் |
| |
கள்ளவி ழங்கன் மார்பன் |
| |
கார்மழை முழக்கிற் சொன்னான். |
|
|
(இ - ள்.) புள் இரைப்பு அன்ன பொன் தார்ப் புரவித் தேர் - பறவைகளின் குரல்போன் றொலிக்கும் பொற்கிண்கிணியணிந்த குதிரைகள் பூட்டிய தேரின்மேல்; இரவி போலா - ஞாயிறு போலமர்ந்து; உடல் சினம் உள் உருத்து எழுந்து பொங்கிக் கடவ நோக்கி - பொருகின்ற சீற்றம் உள்ளத்தில் வெம்மையுடன் எழுந்து பொங்கிச் செலுத்தப் பார்த்து; முள் எயிறு இலங்க நக்கு - கூரிய பற்கள் விளங்க நகைத்து; மன்னர் குழாம் கேட்ப - முடியணிந்த வேந்தர் திரள் கேட்கும்படி; கார் மழை முழக்கின் - கரிய முகிலின் முழக்கைப்போல; கள் அவிழ் அலங்கல் மார்பன் - தேன் விரியும் மாலை மார்பனான சீவகன்; சொன்னான் - கூறினான்.
|
|
|
(வி - ம்.) 'சினம் உடல் கடவ' என்று மாற்றிச், 'சினம்தன் மெய்யைச் செலுத்த' என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர்.
|
( 276 ) |
| 769 |
முருகுலா முல்லை மாலை |
| |
மூப்பிலா முலையி னார்நும் |
| |
மருகுலாம் புலவி நோக்கத் |
| |
தமிர்தமின் றுகுப்ப கொல்லோ |
|