| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
451  | 
 
  | 
 
வேறு
 | 
  | 
 
 
|  774 | 
ஆண்மர வாணிலத் தப்பு வேல்செய்முட் |  
|   | 
காண்வரு காட்டினக் களிற்று நீள்வரை |  
|   | 
நீணில வேந்தெனும் வேழப் பேரினம் |  
|   | 
பூண்முலைப் பிடிக்கவாய்ப் போர்செய் குற்றவே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) ஆள்மர வாள் நிலத்து - ஆளாகிய மரத்தையுடைய வாளாகிய நிலத்திலே; அம்பு வேல் செய் முள் - அம்புவேலாற் செய்த இடு முள்ளையுடைய; காண் வரு காட்டு - எல்லாரும் காண்டலுடைய காட்டில்; இன களிற்று நீள்வரை - இனக் களிறாகிய நீண்ட மலையின்மேல்; நீள் நில வேந்து எனும் வேழப் பேரினம் - பெருநில மன்னர்களாகிய வேழப் பெருந்திரள்; பூண்முலைப் பிடிக்கு அவாய் - பூண்முலை யுடைய தத்தையென்னும் பிடிக்கு ஆசைகொண்டு; போர் செய்குற்றவே - போர் செய்தலுற்றன. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) ஆள் - போர்மறவர். வாணிலம் : பண்புத்தொகை. செய்முள் - இடுமுள். அவாய் - அவாவி. 
 | 
( 282 ) | 
 
 
|  775 | 
தாழிருந் தடக்கையு மருப்புந் தம்பியர் |  
|   | 
தோழர்தன் றாள்களாச் சொரியு மும்மத |  
|   | 
மாழ்கடற் சுற்றமா வழன்று சீவக |  
|   | 
வேழுயர் போதக மினத்தொ டேற்றதே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) தாழ் இருந் தடக்கையும் மருப்பும் தம்பியர் - நீண்ட பெரிய கை நந்தட்டனாகவும் மருப்புக்கள் நபுல விபுலராகவும்; தன் தாள்கள் தோழர் ஆ - கால்கள் தோழர் நால்வரும் ஆகவும்; ஆழ்கடல் சுற்றம் சொரியும் மும்மதம் ஆ - ஆழ்ந்த கடல் போன்ற தேரும் குதிரையும் காலாளும் ஆகிய படை, தான் பெய்யும் மும்மதமாகவும்; சீவக ஏழுயர் போதகம் - இசையேழினாலும் உயர்ந்த சீவகனாகிய ஏழு முழம் உயர்ந்த களிறு; இனத்தொடு ஏற்றது - அரசராகிய வேழத்திரளுடனே போர் செயத் தொடங்கியது. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) தன்னை யானையாக உருவகங் கூறலிற் கடற் சுற்றம் அதனை ஒழிந்த மூன்று படையும் ஆம். யானைக்கு உத்தம விலக்கணம் ஏழு முழ உயரம். துதிக்கையும் வாலும் கோசமும் நான்கு கால்களும் நீண்டிருத்தல் என்பாரும் உளர். 
 | 
( 283 ) | 
 
 
|  776 | 
குடையுடை வேந்தெனுங் குழாங்கொ ணாகமுங் |  
|   | 
கொடியெனும் பிடியுடைக் குமர வேழமும் |  
|   | 
வெடிபடு போர்த்தொழில் காண விஞ்சைய |  
|   | 
ரிடியுடை யினமழை நெற்றி யேறினார். | 
 
 
 |