பக்கம் எண் :

                         
காந்தருவ தத்தையார் இலம்பகம் 454 

தாமரைப் பூவைச் சொரிவதாகிய; ஓர் மாரி ஒத்த - ஒரு முகிலை ஒத்தன.

 

   (வி - ம்.) மற்று : அசை.

 

   பிறை எயிற்றம்பு - அலகம்பு. குழைமுகம் - குண்டலத்தையுடைய முகம்.

( 288 )
780 மறப்படை பசித்தன வயிறின் றார்கெனக்
குறைத்தனர் குஞ்சரம் கூந்தன் மாத்துணித்
திறக்கின ரோடுதோ் மைந்த ரின்னுயிர்
துறக்கம்போய்ப் புகுகெனத் துணிய நூறினார்.

   (இ - ள்.) மறப்படை பசித்தன இன்று வயிறு ஆர்க என - போர்ப்படைகள் முன்பு பசித்திருந்தன யாவும் இப்பொழுது வயிறு நிறைக என்று கூறி; குஞ்சரம் குறைத்தனர் - யானைகளை வீழ்த்தினர்; கூந்தல் மாத்துணித்து ஓடுந் தேர் இறக்கினர் - பிடரி மயிரையுடைய குதிரைகளை வெட்டி, ஓடுந்தேரைத் தாழ்த்தினர்; மைந்தர் இன்னுயிர் துறக்கம் போய்ப் புகுக எனத் துணிய நூறினார் - வீரரின் இனிய உயிர்கள் துறக்கத்திற்சென்று புகுதுக என்று அவர்களைத் துண்டமாக வெட்டினர்.

 

   (வி - ம்.) 'மறப்படை பசித்தன வயிறு இன்று ஆர்க' என்றது மறவர் கூற்று. குஞ்சரம் - யானை. கூந்தன் மா - குதிரை. ஓடுதேர் இறக்கினர் என மாறுக.

( 289 )

வேறு

 
782 ஆற்றுவீர் வம்மி னெம்மோ
  டாண்மைமேம் படீஇய வென்பா
ரேற்றவர் மார்பத் தல்லா
  லிரும்புமேல் விடாது நிற்பார்
கூற்றம்போற் கொடிய யானைக்
  கோடுழு தகன்ற மார்பங்
கீற்றுப்பட் டழகி தாகக்
  கிடக்கெனக் கொடுத்து நிற்பார்.

   (இ - ள்.) எம்மோடு ஆண்மை மேம்படீஇய ஆற்றுவீர் வம்மின் என்பார் - எம்முடன் நும் வீரம் மேம்படுத்தற் பொருட்டுப் பொருதல் வல்லீர் வருவீர் என்பார்; ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார் - எதிர்ந்தவர் மார்பிலன்றி எதிராதார் மார்பிற் படைர்யெறியாமல் நிற்பார்; கூற்றம் போல் கொடிய யானைக் கோடு உழுது - கூற்றுவனைப்