காந்தருவ தத்தையார் இலம்பகம் |
462 |
|
தாங்கி - தாற்றுக்கோலை வலக்கையில் எடுத்து; வென்றி முடிக என - நமக்கு வெற்றி வருக என்று; புரவி முள்ளால் உறுத்தினான் - புரவியை அம் முள்ளாலே உறுத்திச் செலுத்தினான்; கடுகிய வண்ணம் மொழிதல் தேற்றேன் - அவை அப்போது விரைந்த இயல்பை உரைத்தல் அறியேன்; மாவின் தார் ஒலி - புரவிகளின் கிண்கிணி மாலை ஒலி; படையது செவியும் - படையின் காதிலும்; காமர் பொன்றேர் கண்ணும் - அழகிய தேர் (படையின்) கண்களினும்; பற்றி நின்றிட்ட - அமைந்து, விடாமல் நின்றன.
|
|
(வி - ம்.) அன்று, ஏ : அசைகள். முட்கோல் - தாற்றுக்கோல். கடுகிய வண்ணம் மொழிதல் தேற்றேன் என்றது தேவர் வியந்தது
|
( 302 ) |
795 |
அண்ணறோ் பறவை என்பா |
|
ரருவமே யுருவம் என்பார் |
|
மண்ணதே வான தென்பார் |
|
மனத்ததே முகத்த தென்பார் |
|
கண்ணதே செவிய தென்பார் |
|
கலங்கநூல் கழிய நோக்கிப் |
|
பண்ணிய வீதி பற்றி |
|
மண்டலம் பயிற்றி னானே. |
|
(இ - ள்.) அண்ணல் தேர் - சீவகன் தேரை; பறவை என்பார் - பறவை என்றுரைப்பார்; உருவம் அருவமே என்பார் - இஃது உருவம் உடையது என்பார்; (எங்கும் கலத்தலின்) அருவமோ என்றும் உரைப்பர்; மண்ணதே வானது என்பார் - தேர் மண்ணிலுள்ளது என்பர்; வானில் உள்ளது என்பர்; முகத்திலுள்ளது என்பர்; கண்ணதே செவியது என்பார் - கண்களில் உள்ளது என்பர்; செவிகளில் உள்ளது என்பர்; கலங்க - இவ்வாறு பலரும் பலவகையாகக் கூறிக் கலங்கா நிற்க; நூல் கழிய நோக்கி - புரவியியல் கூறும் நூலை முற்றும் ஆய்ந்து; பண்ணிய வீதி பற்றி - அதிற் பண்ணின வீதியைத் தொடங்கி;' மண்டலம் பயின்றினான் - மண்டலம் என்னும் கதியைப் பயிற்றினான்.
|
|
(வி - ம்.) வியத்தற்குரிய இதனைக் கம்பர் தமது காப்பியத்துள்,
|
|
|
”முன்னேயுளன் பின்னேயுளன் முகத்தேயுளன் அகத்தின் |
|
|
தன்னேயுளன் மருங்கேயுளன் தலைமேலுளன் மலைமேல் |
|
|
கொன்னேயுளன் நிலத்தேயுளன் விசும்பேயுளன் கொடியோர் |
|
|
என்னேயொரு கடுப்பென்றிட இருஞ்சாரிகை திரிந்தான்” |
|
என அமைத்துக் கொண்டார்.
|
( 303 ) |