நாமகள் இலம்பகம் |
48 |
|
(இ - ள்.) ஊர்கள் - (நாட்டில் உள்ள) ஊர்கள்; யாவர்க்கும் விலக்கு இல் சாலை - யாவர்க்கும் விலங்குதல் இல்லாத உணவுச்சாலை முதலியனவும்; வெப்பு இல் முப்பழச் சுனைத்தலைத் தணீர் - வெப்பத்தை நீக்கும் கடுநெல்லி தான்றி சூழ இருக்கும் சுனையிலிருந்து காலையில் எடுத்த தண்ணீரிலே; மலர் அணிந்து சந்தனம்செய் பந்தரும் - பூவுமிட்டுச் சந்தனமும் இட்ட தண்ணீர்ப் பந்தரும்; கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி - கொலைக்குரிய வேலனைய கண்ணையுடைய மகளிர் கூத்தாடும் இடமும் அல்லாமல்; ஐம்பொறி நிலத்தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் - ஐம்பொறியும் நுகர்தற்கிடமான பொருள்கள் எல்லாம் நிறைந்து ததும்பும்.
|
|
(வி - ம்.) நோயறுத்தற்குக் கடுநெல்லி தான்றிசூழ வளர்ப்பார்கள். தலைய : இரண்டிடத்தும் வினைக்குறிப்பு.
|
|
இவை அரசன் அறம்.
|
( 46 ) |
76 |
அடிசில்வைக லாயிரம் மறப்புறமு மாயிரங் |
|
கொடியனார்செய் கோலமும் வைகறோறு மாயிர |
|
மடிவில்கம்மி யர்களோடு மங்கலமு மாயிர |
|
மொடிவிலைவெ றாயிர மோம்புவாரி னோம்பவே. |
|
(இ - ள்.) வைகல்தோறும் வைகல் அடிசில் ஆயிரம் - (அவ்வூர்களில்) நாடோறும் காணப்பட்ட வைகுதலையுடைய அடிசிற்சாலையும் ஆயிரம்; அறப்புறமும் ஆயிரம் - அறத்திற்கு விட்ட இறையிலி நிலங்களும் ஆயிரம்; கொடியனார் செய் கோலமும் ஆயிரம் - மகளிர் கோலஞ் செய்துகொள்ளும் இடங்களும் ஆயிரம்; மடிவுஇல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம் - தொழிலிற் சோம்பியிராத கம்மியர்களும் ஆயிரவர்; திருமணமும் ஆயிரம்; வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்ப ஒடிவு இலை - வெவ்வேறாகிய ஆயிரம் பாதுகாப்பாராற் காக்கப்படுதலின் தவிர்தல் இல்லை.
|
|
(வி - ம்.) இல்லையும் வேறாயிரமும் (இலை, வெறாயிரம் என வந்தன.) விகாரம். அறப்புறம் என்பதற்கு ஓதுவிக்குஞ் சாலையென்பதும் ஒன்று. ஒடிவு - தவிர்வு; 'ஒடியா விழவு' (அகநா. 149) என்றார் பிறரும். இறையிலி - வரியில்லாத நிலங்கள். இவை முற்றூட்டெனவும் படும்.
|
( 47 ) |
77 |
நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிட |
|
நற்பொருள்செய் வார்க்கிடம் பொருள்செய்வார்க்கு மஃதிடம் |
|
வெற்றவின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென |
|
மற்றநாடு வட்டமாக வைகுமற்ற நாடரோ. |
|
(இ - ள்.) அந்நாடு வெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்தது என - அவ் ஏமாங்கத நாடு வெற்றியையுடைய
|
|