காந்தருவ தத்தையார் இலம்பகம் |
486 |
|
வர்க்குத் தலைமை பெற்ற கோமானாகிய இந்திரனுக்கும்; ஆகாது என்பது நடந்தது - இயலாது என்னுமாறு அது நிகழ்ந்தது.
|
|
(வி - ம்.) அந்தர விசும்பு - விசும்பாகிய அந்தரம் என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
மந்தித்தரசன் என்றது கலுழவேகனை பாவை : தத்தை. கடிவினை - திருமணவினை. நொடிதல் - கூறுதல். 'மற்று' 'ஓர்; இரண்டு அசைச் சொற்கள். அந்தர விசும்பு : இருபெயரொட்டுமாம் இனி, மாக விசும்பு என்றாற போன்று அந்தரம் என்றது பூமிக்கும் வானுலகிற்கும் இடையிலுள்ள வெளியை எனலுமாம். கோமான் - வாளா இந்திரன் என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.
|
( 344 ) |
837 |
அடிமனை பவள மாக வரும்பொனா லலகு சோ்த்தி |
|
முடிமணி யழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக் |
|
கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானங் கோலி |
|
யிடுபுகை மஞ்சிற் சூழ மணவறை யியற்றி னாரே. |
|
(இ - ள்.) அடிமனை பவளம் ஆக - சுற்றுச் சுவர் பவளப் பலகையால் நிறைத்து; அரும்பொனால் அலகு சேர்த்தி - அரிய பொன்னால் கையலகு சேர்த்து; முடிமணி அழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்க - முடியிலே மணியை அழுத்தி நாட்டிய பெரிய தூண்களின் நெற்றி மறையுமாறு; கம்பல விதானம் கோலி - கம்பலமாகிய மேற்கட்டியைக் கட்டி; கடிமலர் மாலை நாற்றி - மணமிகும் மலர்மாலைகளைத் தூக்கி, இடுபுகை மஞ்சின சூழ - இடுகின்ற அகிற் புகை முகிலெனச் சூழுமாறு; மண அறை இயற்றினார் - திருமண அறையை அமைத்திருந்தனர்.
|
|
(வி - ம்.) அலகு - சலாகை. முடிமணி - சூளாமணி. மூரிக்காழ் - பரிய தூண். கம்பலவிதானம் - துகிலாலாய மேற்கட்டி. மஞ்சு - முகில்.
|
( 345 ) |
838 |
ஐந்துமூன் றடுத்த செல்வத் |
|
தமளிமூன் றியற்றிப் பூம்பட் |
|
டெந்திர வெழினி வாங்கி |
|
யின்முக வாசச் செப்புஞ் |
|
சந்தனச் சாந்தச் செப்புந் |
|
தண்மலர் மாலை பெய்த |
|
விந்திர நீலச் செப்பு |
|
மிளையவ ரேந்தி னாரே. |
|
(இ - ள்.) ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி - ஐந்தாகிய ஒன்று மும்மூன்றாகப் படுத்த செல்வம் உறும் படுக்கை மூன்று அமைத்து; பூமபட்டு எந்திர
|
|