| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
490 |
|
|
பொருந்திய சீவகன் அதைக் கைக்கொண்டு; மரபினால் நோக்குகின்றான் - முறையாக வாசிக்கின்றான்.
|
|
|
(வி - ம்.) 'மரபினால்' என்பதற்கு 'வழிபாட்டுடன்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்னியர்.
|
|
|
இன்னணம் - இவ்வாறு. காவு காண்டலாவது. பூம்பொழிலிற் னெ்று ஆடுதல.் மார்பன் : சீவகன். ஒருவன் என்றது தரன் என்னும் விஞ்சையனை. தொழுதனன் : முற்றெச்சம். மரபு - வாசிக்குமுறைமை. நோக்குதல் - ஈண்டு ஓதுதல் என்பதுபட நின்றது.
|
( 350 ) |
வேறு
|
|
| 843 |
உருமுக்கதிர் வேற்கலுழ னோலையுல கென்னும் |
| |
பருமைக்குருப் பளிங்கிற்புகழ்ப் பஞ்சிமுழு தடுத்த |
| |
திருமிக்குடைச் செல்வன்றிறற் சாமிநனி காண்க |
| |
அருமையற னின்பம்பொரு ளாகென விடுத்தேன். |
|
|
(இ - ள்.) உருமுக் கதிர்வேல் கலுழன் ஓலை - இடி போன்ற, கதிர் வேலையுடைய கலுழன் விடுத்த ஓலை; உலகு என்னும் பருமைக்குருப் பளிங்கின் - உலகம் என்னும் பெரிய நிறமிகுந்த பளிங்கில்; புகழ்ப் பஞ்சி முழுது அடுத்த - புகழாகிய பஞ்சி சிறிதிடமும ஒழியாமல் பரவிய; திருமிக்குடைச் செல்வன் திறல் சாமி நனி காண்க - இச் செல்வத்தினை முற்பிறப்பின் தவ மிகுதியாலே கொண்ட செல்வனான வலிமையுற்ற சீவகசாமி நன்றாக அறிக; அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன் - தனக்கு இன்னும் மேம்பட்ட அறமும் இன்பமும் பொருளும் வளர்க என வாழ்த்தி இது வரவிடுத்தேன்.
|
|
|
(வி - ம்.) தேவனாதலின் கூறினான். விடுத்தேன் : விகாரம் ('விட்டேன் என இருத்தல் வேண்டும்')
|
|
|
கலுழன் - கலுழவேகன். அறம் பொருள் இன்பம் எனற்பாலன செய்யுளாகலின் முறை பிறழ்ந்து வந்தன. சாமி என்றது சீவகசாமி என்றவாறு; விளி.
|
( 351 ) |
| 844 |
தத்தையொடு வீணைமனர் தாம்பொருது தோற்ப |
| |
மொய்த்தகலை நம்பிமுகிழ் முலையையிசை வெல்ல |
| |
வைத்தகதிர் வேலின்வலி யார்க்குரிய ளென்னச் |
| |
சித்தங்கரிந் தாங்குக்கொடி யான்செரு விளைத்தான். |
|
|
(இ - ள்.) மனர்தாம் தத்தையொடு வீணை பொருது தோற்ப - மன்னர்கள் தாம் தத்தையுடன் வீணையால் பொருது தோற்றபின்; மொய்த்த கலை நம்பி முகிழ்முலையை இசை வெல்ல - செறிந்த கலைச் செல்வனாகிய சீவகன் தத்தையை இசையாலே
|
|