| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
492  | 
 
  | 
 
| 
 யாகிய சீவகன் திறத்தில்; வந்து தரன் கூறிய இவ் வாய்மொழியும் - தரன் கூறிய இம் மொழியும்; அன்றி முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை முன்னம் உணர்ந்து நாடி - முன்னர் அச்சணந்தி அடிகள் மொழிந்த காரியமும் முடியுங் கூறுபாட்டையும் முன்பே குறிப்பாலே நாடி உணர்ந்து; இன்னணம் விடுத்தேன் - இனி யாம் சேறல் கருமம் அன்று என்று கருதித் தத்தையைச் சீதத்தனுடனே வரவிட்டேன். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) கலுழவேகன் வரின் சீவகன் வரலாறு மாறுறும். வாய் மொழி என்றார், நிமித்திகன் கூறக் கேட்டிருந்தது இப்பொழுது முற்றின செய்தியைத் தரன் கூறுதலின். 
 | 
  | 
 
| 
    வரன் - மேலானவன்; ஈண்டு அச்சணந்தி முனிவன். எந்தை என்றது உணர்வு குறித்துக் கூறியது; முறைப் பெயரன்று. பாணி - தாளம். 
 | 
( 354 ) | 
 
 
|  847 | 
எள்ளுநர்கள் சாயவென தோளிரண்டு நோக்கி |  
|   | 
வெள்ளிமலை முழுதுங்கொடி யெடுத்ததிக லேத்திக் |  
|   | 
கள்செய்மலர் மார்பனுறு காப்பிகழ்த லின்றி |  
|   | 
யுள்ளுபொரு ளெம்முணர்த்தி யன்றியுள வேண்டா. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) என தோள் இரண்டும் நோக்கி - என்தோளிரண்டையும் பார்த்து; எள்ளுநர்கள் சாய - இகழ்ந்திருக்கும் பகைவர்கள் சாயுமாறு; இகல் ஏத்தி - சீவகன் எந்தை செய்த போரை ஏத்தி; வெள்ளிமலை முழுதும் கொடி எடுத்தது - வெள்ளிமலை யெங்கும் வெற்றிக்கொடி பிடிக்கப்பட்டது; (இனி மேல் எந்தை வெற்றியும் தோல்வியும் என்னுடையனவே ஆகையால்) கள்செய் மலர்மார்பன் - தேன் பொருந்திய மலர் மார்பன்; உறு காப்பு இகழ்தல் இன்றி - மிக்க காவலை இகழாமல்; உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி - தாம் நினைத்திருக்கும் பொருள்களும் எமக்கு அறிவித்தல்லது; உள வேண்டா - மேல் நினைத்தலும் வேண்டா. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) 'உளவும்' என்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. 
 | 
  | 
 
| 
    எள்ளுநர் - இகழ்பவர்; பகைவர். மார்பன் : முன்னிலைப் புறமொழி. 
 | 
( 355 ) | 
 
 
|  848 | 
ஆம்பொருள்க ளாகுமது யார்க்குமழிக் கொண்ணாப் |  
|   | 
போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணந் |  
|   | 
தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்றுதர லின்றே |  
|   | 
வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே. | 
 
 
 |