| நாமகள் இலம்பகம் |
50 |
|
|
கடிநகர் அமைதி செப்புவாம் - பெருமைமிகும் காவலையுடைய இராசமா புரத்தின் நிறைவு கூறுவாம்.
|
|
|
(வி - ம்.) அம் : சாரியை.
|
|
|
மா - விலங்கு. தழீஇ : சொல்லிசை அளபெடை, பீடின் : இன் : ஐந்தனுருபு. கடி : உரிச்சொல்.
|
|
|
இனி, இச்செய்யுளைப் பெண்வலைப்படாத சான்றோர் பெருமையோடு மிக்குள்ள அண்ணலங் கடிநகர் எனக் கோடலுமாம். என்னை ? ஒரு நாட்டின் சிறப்பிற்கு அதன்கண் சான்றோர் நிரம்பியிருத்தலே சிறந்த சான்றாம் என்ப. இக் கருத்தை ”எவ்வழி ஆடவர் நல்லவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” எனவரும் ஒளவை மெய்ம்மொழியினும்,
|
|
|
”பொதியிலாயினும் இமயமாயினும்...........புகாரேயாயினும் நடுக்கின்றி நிலைஇய என்பதல்லதை ஒடுக்கங்கூறார் உயர்ந்தோர் உண்மையின்” எனவரும் இளங்கோவடிகளார் கூற்றினும் காண்க.
|
|
|
இனி, இச் சிந்தாமணிச் செய்யுட்கு இப்பொருளே கொண்டு கம்ப நாடர் தமது காப்பியத்தின்கண் தொடக்கத்திலேயே இக் கருத்தினை,
|
|
| |
”ஆசலம்புரி ஐம்பொறி வாளியும் |
|
| |
காசலம்பு முலையவர் கண்ணெனும் |
|
| |
பூசலம்பும் நெறியின் புறஞ்செலாக் |
|
| |
கோசலம் புனை யாற்றணி கூறுவாம்.” (ஆற்றுப். 1) |
|
|
என்று மேலும் அழகுற அமைத்துள்ளனர்.
|
|
|
'உடலம் விட்டிடும்' என்புழி உடலம் வறிய உடலம் என்பது படநின்றது. அண்ணலங் கடிநகர் என்றது தலைநகரம் என்பதுபட நின்றது.
|
( 49 ) |
| 79 |
விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன |
| |
சண்பகத் தணிமலர் குடைந்து தாதுக |
| |
வண்சிறைக் குயிலொடு மயில்கண் மாறுகூய்க் |
| |
கண்சிறைப் படுநிழற் காவு சூழ்ந்தவே. |
|
|
(இ - ள்.) விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன - வானளாவிய பெரிய கிளைகள் வளையுமாறு பூத்தனவாகிய; சண்பகத்து அணிமலர் தாதுகக் குடைந்து - சண்பகத்தின் அழகிய மலரை மகரந்தப்பொடி சிந்தக் குடைந்து; மயில்களொடு குயில்மாறு கூய் - மயில்களுடன் குயில்கள் மாறாகக் கூவி; கண் சிறைப்படும் நிழல் காவு சூழ்ந்த - நோக்கினார் கண்கள் மீளாத நிழலையுடைய பொழில்கள் அந் நகரைச் சூழ்ந்தன.
|
|
|
(வி - ம்.) மெலிய - வளைய. கார்காலத்து மயிலின் களிப்பைத் தான் உட்கோடலின் 'மாறு' என்றார். மயிலொடென மாறுக. செய்தென் எச்ச அடுக்கு, 'அம்முக்கிளவியும்' (தொல். வினை - 34) என்னுஞ் சூத்திரத்திற் பிறவினை கொள்ளும் என்றதனால், பிறவினையாகிய 'உடைய' [நிழலையுடைய] என்னுங் குறிப்பினைக் கொண்டது.['கூவி'
|
|