பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 500 

   (இ - ள்.) தொழுவில் தோன்றிய தோம்அறு கேவலக் கிழவன் மூதெயில்போல - இல்வாழ்வின் உண்டான குற்றம் அற்ற பேரின்ப மடந்தையையுடைய அருக தேவனது பொன்எயில் வட்டம்போல; முழவம் கண் துயிலாத முதுநகர் - முழவின் ஒலி மாறாத இராசமாபுரம்; நீர் விழவு விளையாட்டு விருப்பினால் - நீர் விழவாகிய விளையாட்டின் காதலால்; கிளர்வுற்றது - கிளர்ச்சி கொண்டது.

 

   (வி - ம்.) இனி, மூதெயிலுக்குத் திருநாளுக்குப் போவாரைப் போல என்றுமாம்.

 

   முழவம் - ஈண்டு அதன் முழக்கத்திற்கு ஆகுபெயர். கண்துயிலாத என்றது ஈண்டு, இடையறாத என்றவாறு. முதுநகர் - பழைதாகிய நகரம். தொழு : ஆகுபெயர் ; ஈண்டுக் கட்டுண்ட இல்வாழ்க்கையைக் குறித்துநின்றது. தொழு - தளை. தோம்அறு கேவலக்கிழவன் என்றது அருகக் கடவுளை. எயில் - பொன் எயில் வட்டம். நகர் மூதெயில்போல் கிளர்வுற்ற தென்க.

( 6 )
857 வள்ள நீரர மங்கைய ரங்கையா
லுள்ளங் கூரத் திமிர்ந்துகுத் திட்டசாந்
தள்ள லாயடி யானை யிழுக்கின
வெள்ள நீர்வளை வெள்ள முரன்றவே.

   (இ - ள்.) அர மங்கையர் அங்கையால் - வான் மகளிரைப் போன்ற மங்கையரின் அழகிய கையினால்; உள்ளம் கூர - மனக் களிப்பு மிகையால்; உகுத்திட்ட வள்ளநீர் - சிந்திய கிண்ணத்திலுள்ள பனிநீரும்; திமிர்ந்திட்ட சாந்து - திமிர்ந்திட்ட சந்தனமும்; அள்ளலாய் யானை அடி இழுக்கின - சேறாக அச் சேற்றின் கண் யானை அடி வழுக்கின; வெள்ளநீர் வளை வெள்ளம் முரன்ற-கடல் நீரிற் பிறந்த சங்குகளும் வெள்ளம் என்னும் எண்ணாக முழங்கின.

 

   (வி - ம்.) வள்ளநீர் - வள்ளத்துள்ள பனிநீர். அரமங்கையர்: உவம ஆகுபெயர். உள்ளம் - மனவெழுச்சி. கூர்தல் - மிகுதல். அள்ளல் - சேறு; சேறாக அதன்கண் யானைகளும் இழுக்கின என்க. வெள்ளம் இரண்டனுள் முன்னது கடல், ஏனையது ஒரு பேரெண்.

( 7 )
858 நீந்து நித்தில வூர்தி நிழன்மருப்
பேந்து கஞ்சிகை வைய மிளவெயிற்
போந்து காய்பொற் சிவிகைநற் போதகங்
கூந்தன் மாலைக் குமரிப் பிடிக்குழாம்.

   (இ - ள்.) நீந்தும் நித்தில ஊர்தி - (தெருவிலே மக்களின் நெருக்கத்தைக்) கடந்து செல்லும் முத்துப் பந்தலும்; நிழல்