| குணமாலையார் இலம்பகம் | 
505  | 
 
  | 
 
| 
    (வி - ம்.) மின்போலும் இடையை 'மின்' என்றார் எனக்கொண்டு, 'வெம்முலை' நெருங்கலின் உண்டான சோர்வை இடைநீக்குதலின், அன்னங்களின் ஆட்டமுடைய பொழில் என்னுமாறு சென்று அப்பொழிலை அடைந்தார்' என்பர் நச்சினார்க்கினியர். 
 | 
( 17 ) | 
 
 
|  868 | 
அள்ளு டைக்குவ ளைக்கய நீடிய |  
|   | 
கள்ளு டைக்கழு நீர்ப்புனற் பட்டமும் |  
|   | 
புள்ளு டைக்கனி யிற்பொலி சோலையு |  
|   | 
முள்ளு டைப்பொலி விற்றொரு பாலெலாம். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) அள்உடைக் குவளைக் கயம் - அள்ளிக் கொளலாந் தன்மையை உடைய நீலமலர் நிறைந்த குளத்தையும்; கள்உடைக் கழுநீர் நீடிய புனல் பட்டமும் - தேன் பொருந்திய கழுநீர் மலர்களையுடைய நீரறாத ஓடையையும்; புள் உடைக்கனியின் பொலி சோலையும் - பறவைகளையுடைய, கனிகளாற் பொலிவுற்ற பொழிலையும்; உள் உடைப் பொலிவிற்று ஒருபால் எலாம் - உள்ளே உடைய பொலிவினையுடையது அப் பொழிலின் ஒருபக்கம் எல்லாம். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) அள்ளுடை என்புழி அள்ளல் என்பதன் கடைக்குறையாகவும் கொள்ளலாம். அள்ளல் - சேறு. குவளைக்கயம் - குவளைமலர்ந்த குளம். புனற்பட்டம் - வற்றாத நீரோடை. பொலிவிற்று - பொலிவினையுடையது. 
 | 
( 18 ) | 
 
 
|  869 | 
செம்பு றக்கனி வாழையுந் தேன்சொரி |  
|   | 
கொம்பு றப்பழுத் திட்டன கோழரை |  
|   | 
வம்பு றக்கனி மாத்தொடு வார்சுளைப் |  
|   | 
பைம்பு றப்பல விற்றொரு பாலெலாம். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) செம்புறம் கனி வாழையும் - சிவந்த புறமுடைய கனிகளையுடைய வாழை மரங்களையும்; தேன்சொரி கொம்பு உறப் பழுத்திட்டன கோழ் அரை வம்பு உறக்கனி மா - தேனைச் சொரிந்து கொம்புகளிலுற்றே பழுத்தனவாகிய, கொழுவிய அடிமரத்தையுடைய, புதுமை பொருந்திய கனிகளையுடைய, மாமரங்களையும்; தொடு வார் சுளைப் பைம்புறப் பலவிற்று ஒருபாலெலாம் - தொடுத்த நீண்ட சுளைகளையுடைய, பசுமையான மேற்பக்கமுடைய பலாமரங்களையும் உடையது ஒருபக்கம் எல்லாம். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) 'கொம்புறப் பழுத்திட்டன தேன்சொரி' என்னுந் தொடரைப் பலவிற்குக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். 
 | 
  | 
 
| 
    கோழரை - வழுவழுப்பான அடிமரம். வம்பு - புதுமை. மாத்தொடு. மாமரத்தினோடு. வார்சுளை - நீண்ட சுளை . பைம்புறம் - பசிய மேற்புறம். பலவிற்று - பலாமரத்தினையுடையது. 
 | 
( 19 ) |