| குணமாலையார் இலம்பகம் |
521 |
|
|
பின் அவள் மகளான கன்னிப் பருவமுடைய சுரமஞ்சரிக்கு நேர்ந்ததை; கன்னியர் கூறினார் - பெண்கள் கூறினார்கள்.
|
|
|
(வி - ம்.) கன்னி மாநகர் - அழிவில்லாத பெரிய நகரம். கன்னி நீலக்கடிமலர்க்கண் கன்னி கன்னியர் சூழ்தரக் கன்னி மாநகர்க் கன்னிமாடம் அடைய என மாறுக. கன்னி நீலம் - புதிய நீலம். கன்னியர் நற்றாய்க்குக் கன்னிக்கு உற்றது கூறினார் என மாறுக. கன்னியர் - அவள் தோழியர். கன்னிக்கு என்றது சுரமஞ்சரிக்கு என்னும் பொருட்டாய் நின்றது.
|
( 50 ) |
| 901 |
கண்கள் கொண்ட கலப்பின வாயினும் |
| |
பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் |
| |
றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் |
| |
பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். |
|
|
(இ - ள்.) கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் - கண்கள் ஒன்றன் குறிப்பினை ஒன்று தப்பாமல் கொண்ட கலப்பின ஆனாலும்; பெண்கள் கொண்ட பிற செற்றம் விடா என்று - பெண்கள் தம் மனத்திற் கொண்ட தனிப்பட்ட செற்றங்களை விடமாட்டார் என்று (மனத்திற் கொணடு); ஒண்கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு - ஒளியுடைய கண்ணாளாகிய சுரமஞ்சரியின் நற்றாய், தந்தையாகிய குபேரதத்தனுக்கு; பண்கொள் தேன்மொழியால் பயக்கூறினாள் - பண்ணனைய இனிய மொழியால் மெல்ல உரைத்தாள்.
|
|
|
(வி - ம்.) கூறியவை அடுத்த இரண்டு செய்யுளிலும் வரும்.
|
|
|
பெண்கள் என்றது பெண்ணினங்கள் என்னும் பொருட்டு ஆதலின் அஃறிணை முடிபேற்றது. ”பெண்கள் சாதிப்பன்மை” என்பர் நச்சினார்க்கினியர். ஒண்கணாளவன் ஒண்கணாளாகிய அச்சுரமஞ்சரியின். தாய் பெயர் - சுமதி, தந்தை பெயர் - குபேரதத்தன் என்பவற்றை மேல் வரும் (2075-76 ஆம்) செய்யுள்களான் உணர்க.
|
( 51 ) |
| 902 |
விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா |
| |
ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் |
| |
கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு |
| |
முண்ண லேனினி யென்றுரை யாடினாள். |
|
|
(இ - ள்.) நும்மகள் எண்ணம் - நும் மகளின் நினைவு; விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் எண்ணம் - வானில் திரியும் திங்களை நீக்க விரும்பினோர் எண்ணமாயிருந்தது; யாது எனின் - அந்த எண்ணம் யாது என்றால்; கண்ணின் ஆடவர்க் காணினும் கேட்பினும் - கண்ணாலே ஆடவரைக் கண்டாலும் ஆடவர் என்ற சொல்லைக் காதினாலே கேட்டாலும்; இனி
|
|