|
குணமாலையார் இலம்பகம் |
528 |
|
|
|
|
| 916 |
விடாக்களி வண்டுண விரிந்த கோதையர் |
| |
படாக்களி யிளமுலை பாய விண்டதர்க் |
| |
கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக |
| |
னடாக்களி யவர்தொழில் காண வேகினான். |
|
|
(வி - ம்.) உவா - யானை. கவான் - துடை; ஈண்டுக் கால் என்னும்
பொருட்டு. கவான் முதல் என்பதற்கு மடியின்மேல் எனினுமாம். கனக மாழை -
பொற்கட்டி. சிந்தை - ஈண்டுத் துனபம். உடைகடல் : வினைத்தொகை.
|
( 63 )
|
|
வேறு |
|
|
|
| 914 |
சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி |
| |
யாரர வக்கழ லாடவ ரோடும் |
| |
போரர வக்களம் போன்றுபொன் னார்புன |
| |
னீரர வம்விளத் தார்நிக ரில்லார். |
|
|
(இ - ள்.) பொன் ஆர் புனல் - பொன் நிறைந்த யாறு; போர்
அரவக்களம் போன்று - போர் செய்யும் ஆரவாரமுடைய களம்போலத் தோன்ற; நிகர்
இல்லார் - ஒப்பில்லாராகிய; சீர் அரவச் சிலம்பு ஏந்தும் மென்சிறு
அடியார் - ஒலிதரும் சிலம் பணிந்த மெனமையான சிற்றடி மங்கயைர்; அரசக்
கழல் ஆடவரோடும் - ஒலிபெறுங் கழலணிந்த ஆடவரோடும்; நீர் அரவம் விளைத்தார்
- நீராரவாரத்தை உண்டாக்கினர்.
|
|
|
(வி - ம்.) போன்று - போல : எச்சத்திரிபு. உவமவுருபு
வினையெச்சமும் பெயரெச்சமுமாய் நிற்கும். புனல் - யாறு : ஆகுபெயர்.
|
( 64 )
|
|
|
| 915 |
கார்விளை யாடிய மின்னனை யார்கதிர் |
| |
வார்விளை யாடிய மென்முலை மைந்தர் |
| |
தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய |
| |
நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே. |
|
|
(இ - ள்.) கார் விளையாடி மின் அனையார் - காரிலே நுடங்கிய
மின்கொடி போன்ற மகளிரின்; கதிர் வார் விளையாடிய மென்முலை - கதிர்த்த
வார் பயின்ற மென்முலைகள்; மைந்தர் தார் விளையாட்டொடு தங்குபு -
மைந்தரின் தாரிலே விளையாடு தலிலே நிலைபெற்று; பொங்கிய நீர் விளையாட்டு
அணி நின்றது - மிக்க நீர் விளையாட்டின் அழகு இடைவிடது நிகழ்ந்தது.
|
|
|
(வி - ம்.) நின்றதை: ஐ; சாரியை. அன்று, ஏ: அசைகள்.
|
( 65 )
|
|
வேறு |
|