பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 53 

வாள் தொழில் இடமும் - கேடகத்துடன் வாட்பயிற்சி செய்யும் இடங்களும்; கேடுஇலாக் கோடு வெஞ்சிலைத் தொழில் இடமும் கூடின்று - பயில்வதிற் குறையில்லாத வளைந்த விருப்பம் ஊட்டும் விற்பயிற்சி செய்யும் இடமும் கூடிற்று.

 

   (வி - ம்.) ஆடகத்தார் : வேற்றுமைத்தொகை. கோடு சிலை : வினைத்தொகை. கூடின்று : ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று.

( 55 )

இடை நகர்

 
85 புடைநகர்த் தொழிலிடங் கடந்து புக்கபி
னிடைநகர்ப் புறம்பணை யியம்பு மோசையோர்
கடலுடைந் ததுவெனக் கலந்த தக்கடன்
மடையடைத் தனையதம் மாக்க ளீட்டமே.

   (இ - ள்.) புடைநகர்த் தொழில் இடம் கடந்து புக்கபின் - புறநகரில் தொழில் செய்வாரிடத்தை யான் ஒருவாற்றாற் கூறி இடை நகரினது தன்மைகூறத் தொடங்கினபின்; புறம்பணை இசைக்கும் இடைநகர் ஓசை - புடைநகர்ப் புறமாகிய மருத நிலத்தே சென்றொலிக்கும் இடைநகரின் ஓசை; கடல் உடைந்தது எனக் கலந்தது - கடல் உடைந்தாற்போல ஆங்குப் பொருந்தியது; அம் மாக்கள் ஈட்டம் - அவ்வோசை அடைத்தனையது - அதன் உடைப்பை உலகு குவிந் தடைக்குந் தன்மையை ஒத்தது.

 

   (வி - ம்.) ஆதலால் என்னாற் கூறுதல் அரிது.

 

   'கடந்து' என்றார் கூறுதல் அருமை பற்றி. புகுதல் : சொல்லப் புகுதல். அடைத்தனையது : [அடைக்குந் தன்மையது என்று பொருள் படுவதால்] கால மயக்கம்.

 

   இனி, 'புடைநகரிலே தொழில் செய்யும் இடத்தைக் கடந்து உள்ளே சென்றால்................ அடைத்தனையது' என அந்நகரைக் காண்போருக்குக் கூறுதல்போலப் பொருள் கொள்வதே சிறப்புடையதாதலைக் காண்க.

( 56 )
86 சிந்துரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமுஞ்
சந்தன நீரொடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை
யிந்திர வில்லெனக் கிடந்த வீதியே.

   (இ - ள்.) சிந்துரப் பொடிகளும் செம்பொன் சுண்ணமும் சந்தன நீரொடு கலந்து - சிவப்புநிறப் பொடிகளையும் பொற்சுண்ணங்களையும் சந்தனத்தையும் பனிநீரிலே கலந்து; பந்தொடு சிவிறியில் தையலார் சிதற - மட்டத்துருத்தியாலும் நெடுந்துருத்தியாலும் மங்கையர் சிதற; பார்மிசை இந்திரவில் என வீதி