| குணமாலையார் இலம்பகம் | 
530  | 
 
  | 
 
| 
    (வி - ம்.) இதுமுதல் நந்தட்டனும் அவன் தோழரும் தம்மிற் கூறுவன என்றே நச்சினார்க்கினியர் கூறுகின்றனர். 
 | 
  | 
 
| 
    உயிர் ஒன்றேயுடையீர் என மாறுக. என்றது இதுபோய்விடின் மேற்கோடாற்குத் துணையுயீர் இலீர் என்பது படநின்றது. சேம உயிர் - துணையுயிர். இச் செய்யுள் தற்குறிப்பேற்றம். பொன்தோய் கொடி என்றது கற்பகத்திற் படரும் காமவல்லியை. 
 | 
( 67 ) | 
 
 
|  918 | 
அழல்செய் தடத்துண் மலர்ந்த |  
|   | 
  வலங்கன் மாலை யதனை |  
|   | 
நிழல்செய் நீர்கொண் டீர்ப்ப |  
|   | 
  நெடுங்கண் ணினையி னோக்கிக் |  
|   | 
குழையும் பூணு நாணுங் |  
|   | 
  கொழுந னுவப்ப வணிகென் |  
|   | 
றிழைகொள் புனலுக் கீயு |  
|   | 
  மிளையோ ணிலைமை காண்மின். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) அழல்செய் தடத்துள் மலர்ந்த - நெருப்பையுடைய தடத்திலே மலர்ந்த; அலங்கல் மாலை அதனை - அசைகின்ற பொன்னரிமாலையை; நிழல்செய் நீர் கொண்டு ஈர்ப்ப - தெளிந்த நீர் தானே கெண்டு போக; நெடுங்கண் இணையின் நோக்கி - அதனை நீண்ட இரு கண்களினாலும் பார்த்து; கொழுநன் உவப்ப அணிக என்று-(இவற்றையும்) நின் கணவன் மகிழ அணிந்து கொள்க என்றுரைத்து; குழையும் பூணும் நாணும் இழைகொள் புனலுக்கு ஈயும் - குழையையும் பூணையும் நாணையும் முன்னர்த் தன் அணியைக் கொண்ட நீருக்குக் கொடுக்கும்; இளையோள் நிலைமை காண்மின் - இளைய நங்கையின் தன்மையைக் காண்மின். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) அழல் செய்தடம் என்றது பொற்கொல்லருலையினை. நாண் - பொன்நாண். இழைதலையுடைய புனலுமாம். கொழுநன் - வருணன். நிலைமை - ஈண்டு பேதைமையின் மேற்று. 
 | 
( 68 ) | 
 
 
|  919 | 
கோல நெடுங்கண் மகளிர் |  
|   | 
  கூந்தல் பரப்பி யிருப்பப் |  
|   | 
பீலி மஞ்ஞை நோக்கிப் |  
|   | 
  பேடை மயிலென் றெண்ணி |  
|   | 
யாலிச் சென்று புல்லி |  
|   | 
  யன்மை கண்டு நாணிச் |  
|   | 
சோலை நோக்கி நடக்குந் |  
|   | 
  தோகை வண்ணங் காண்மின். | 
 
 
 |