| குணமாலையார் இலம்பகம் | 
536  | 
 
  | 
 
 
|  928 | 
தாம்பா லவரை நாடித் |  
|   | 
  தந்தூட் டயர்வார் சொரிய |  
|   | 
வோம்பா நறுநெய் வெள்ள |  
|   | 
  மொழுகும் வண்ணங் காண்மின். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) ஊட்டு அயர்வார் தாம் - உணவு இடுவோர்கள் தாம்; பாலவரை நாடித் தந்து - உண்ணும் இயல்பினரைத் தேடிக் கொணர்ந்து; தீ பால் அடிசில் - இனிய பாற்சோற்றையும் ; செம்பொன் வண்ணப் புழுக்கல் - செம்பொன் நிறமுடைய பருப்புச் சோற்றையும்; அக்கார அடலை - சருக்கரைப் பொங்கலையும்; அண்பல் நீர் ஊறு அமிர்தம் - அடிப் பல்லில் நீரூறும் புளிங்க்றியும்; அமிர்தம் - பிற சோற்றையும்; ஆம் பால் - இவற்றிற்கெல்லாம் பயன்படும் பாலையும்; சொரிய - சொரிதலின்; ஒம்பா நறுநெய் வெள்ளம் - இவற்றையுண்ண வார்த்த கட்டுப்படாத நறுநெய் வெள்ளம்போல; ஒழுகும் வண்ணம் காண்மின்!- ஒழுகும் இயல்பைக் காணுமின்! 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) அக்காரடலை - அக்காரத்தினை அடப்பட்டது; அக்காரையாக அடப்பட்டதுமாம். அக்காரம் - சருக்கரை. 
 | 
( 78 ) | 
 
 
|  929 | 
அள்ளற் சேற்று ளலவ |  
|   | 
  னடைந்தாங் கனைய மெய்யின் |  
|   | 
கள்செய் கடலு ளிளமைக் |  
|   | 
  கூம்பின் கடிசெய் மாலைத் |  
|   | 
துள்ளு தூமக் கயிற்றிற் |  
|   | 
  பாய்செய் துயரி நிதிய |  
|   | 
முள்ளு காற்றா யுழலும் |  
|   | 
  காமக் கலனும் காண்மின். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யின் - அள்ளலாகிய சேற்றில் அடைந்த அலவனைப் போன்ற மெயயுடன் ; கள்செய் கடலுள் - கள்ளாகிய கடலிலே; இளமைக் கூம்பின் கடிசெய் மாலைக் கயிற்றின் - இளமையாகிய பாய்மரத்திலே கட்டின மணமாலையாகிய கயிற்றுடன்; துள்ளு தூமாப்பாய் செய்து - துள்ளும் புகையாகிய பாயை விரித்து; உயரி - அதனை உயர்த்து; நிதியம் உள்ளு காற்றுஆ உழலும்-பொருளே நினைக்கப்படுங் காற்றாகத் திரிகின்ற; காமக் கலனும் காண்மின்! - காமக் கலமாகிய பரத்தையையும் பார்மின்! 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) கள்செய் கடல் - கள்ளுண்டார் தன்மையைச் செய்யும் நீர் விளையாட்டுத் திரள். கடல் : உவமையாகுபெயர். 'அடாக்களியவர்' (சீவக. 916) என்றார் முன்னும். 
 | 
( 79 ) |