| குணமாலையார் இலம்பகம் |
537 |
|
| 930 |
தாய்தன் கையின் மெல்லத் |
| |
தண்ணென் குறங்கி னெறிய |
| |
வாய்பொன் னமளித் துஞ்சும் |
| |
மணியார் குழவி போலத் |
| |
தோயுந் திரைக ளலைப்பத் |
| |
தோடார் கமலப் பள்ளி |
| |
மேய வகையிற் றுஞ்சும் |
| |
வெள்ளை அன்னங் காண்மின். |
|
|
(இ - ள்.) தாய் தன் கையின் குறங்கின் மெல்லத் தண் என் எறிய - தாய் தன் கையினாலே துடையிலே மெல்லத் தண் எனத் தட்ட; ஆய் பொன் அமளித் துஞ்சும் அணிஆர் குழவி போல - சிறந்த பொன் அணையிலே துயிலும் அழகிய குழந்தை போல; தோயும் திரைகள் அலைப்ப - செறியும் அலைகள் வந்து மோத; தோடு ஆர் கமலப் பள்ளி மேய வகையில் துஞ்சும் - இதழ் நிறைந்த தாமரை மலர்ப்பாயிலே தனக்குப் பொருந்தும் வகையில் துயிலும்; வெள்ளை அன்னம் காண்மின் - வெள்ளை அன்னத்தைப் பார்மின்!
|
|
|
(வி - ம்.) கார் அன்னமும் உண்மையின் வெள்ளை அன்னம் இனஞ்சுட்டிய பண்பு.
|
|
|
தண் என என்பது மென்மைப் பண்பின் மேனின்றது. குறங்கின் தண்ணென் எறிய என மாறுக. அமளி - படுக்கை. தோடார் கமலம் - இதழ் நிறைந்த தாமரை மலர். மேயவகை-தன்மனம் பொருந்தியபடி.
|
( 80 ) |
| 931 |
நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் |
| |
கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் |
| |
சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன |
| |
வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். |
|
|
(இ - ள்.) நீலத் துகிலில் கிடந்த நிழல்ஆர் தழல் அம் மணிகள் - நீல ஆடையிலே கிடந்த ஒளிவிடும் தீயனைய செம்மணிகள்; கோலச் சுடர்விட்டு உமிழ - அழகிய சுடர்களை மிகுதியாகச் சொரிதலால்; சால நெருங்கிப் பூத்த தடம் தாமரைப் பூ என்ன - (உண்மையறியாமல்) மிகவும் நெருங்கி மலர்ந்த பொய்கையிலுள்ள தாமரை மலரென்றெண்ணி, குமரி அன்னம் குறுகி - இளமையான அன்னப் பறவை அருகிற் சென்று; ஆலி - அகவிக் கொண்டு; சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின் - சுடர்களைப் பற்ற (அகப்படாமையால்) வருந்தும் தன்மையை நோக்குமின்.
|
|