| குணமாலையார் இலம்பகம் |
538 |
|
|
(வி - ம்.) நீலத்துகில் - நீர்க்குவமை எனினுமாம். நிழல் - ஒளி. குமரியன்னம் - இளமையுடைய அன்னம். ஆலி - ஆரவாரித்து. அழுங்குதல் - வருந்துதல். துகிலினுக்கு இலை உவமை.
|
( 81 ) |
| 932 |
வடிக்கண் மகளிர் வைத்த |
| |
மரக தந்நன் மணிக |
| |
ளொடிக்கச் சுடர்விட் டுமிழ |
| |
வுழையம் பிணையொன் றணுகிக் |
| |
கொடிப்புல் லென்று கறிப்பா |
| |
னாவிற் குலவி வளைப்பத் |
| |
தொடிக்கட் பூவை நோக்கி |
| |
நகுமா றெளிதோ காண்மின். |
|
|
(இ - ள்.) வடிக்கண் மகளிர் வைத்த மரகத நன்மணிகள் - மாவடு வனைய கண்களையுடைய பெண்கள் வைத்த மாரகத மணிகள்; ஒடிக்கச் சுடர்விட்டு உமிழ - ஒடிக்கலாம் படி ஒளியினை மிகுதியாகச் சொரிய; உழை அம்பிணை ஒன்று - அழகிய பெண்மான் ஒன்று; கொடிப் புல் என்று - அறுகம் புல் என்று எண்ணி; அணுகிக் கறிப்பான் நாவின் குலவி வளைப்ப - நெருங்கிக் கறிப்பதற்கு நாவினாலே (கழுத்தை வளைத்து) வளைப்ப; தொடிக்கண் பூவை நோக்கி நகும் ஆறு ஓ எளிது காண்மின்! - வளையல் போல் வட்டமான கண்களையுடைய பூவை அக் காட்சியைப் பார்த்து நகைப்பது ஓ எளிதான காட்சி! அதனைப் பார்மின்!
|
|
|
(வி - ம்.) ஓ : வியப்பினைத்தரும் குறிப்பிடைச்சொல்.
|
|
|
வடி - மாவடுவின் வகிர். உழை - மான். அம் உழைப்பிணை என மாறுக. அழகிய மான்பிணை என்க. கொடிப்புல் - அறுகம்புல். கறிப்பான் : வினையெச்சம். பூவை - நாகணவாய்ப்புள். இதன் கண்ணுக்கு வளையல் உவமை.
|
( 82 ) |
| 933 |
இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் |
| |
கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவின் |
| |
சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதா |
| |
னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். |
|
|
(இ - ள்.) இன்னன இவையும் பிறவும் - இத்தன்மையான காட்சிகளும் பிற காட்சிகளும்; கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவின் - கவிகளின் புகழ்ச்சியினும் மேம்பட்டுக் காண்பதற்கு இனிய நீர்விழாவிலே; எரிபொன் ஆரம்மார்பன் - ஒளிவிடும் பொன்மாலை அணிந்த மார்பன்; சுவையின்
|
|