| குணமாலையார் இலம்பகம் | 
541  | 
 
  | 
 
| 
 கென நடுங்கத் தோன்றினான் - எவரும் கண்டவுடன் திடுக்கிட்டு நடுங்குமாறு தோன்றினான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) கள்ளின் கடுமை தாங்க வெள்ளியாற் சமைத்தனர். 
 | 
  | 
 
| 
    கட்குடக்கன்னியர் - கட்குடஞ்சுமந்த கன்னியர். உடன் - கண்டவுடன், தூய்மை, புறந்தூய்மையும் அகந்தூய்மையுமாம். உட்கு - அச்சம். களிமகன் - கட்குடியன். 
 | 
( 87 ) | 
 
 
|  938 | 
தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது |  
|   | 
வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை |  
|   | 
யூன்றிவாய் மடுப்பவோர் முழையுட் டீங்கதிர் |  
|   | 
கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) தோன்றிய புண்செய் வேலவற்கு - அங்ஙனந் தோன்றிய புண்செய்யும் வேலேந்திய அவனுக்கு; வான்திகழ் கொடியனார் - முகிலிடைத் தோன்றும் மின்னுக் கொடியனையார் இருவரும்; வெள்ளி வட்டகை வாய் ஊன்றி - வெள்ளிக் கிண்ணத்தை வாயிலே அழுத்தி ; தூமது மடுப்ப - தூய மதுவைக் கொடுப்ப; ஓர் முழையுள் தீங்கதிர் கான்றிடு கதிர்மதி இரண்டு போன்றவே - ஒரு குகையிலே இனிய கதிரைச் சொரியும் ஒளிமதி இரண்டினைப் போன்றன. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) வேலவன் : முற்கூறிய கனிமகன். வான்திகழ்கொடி - மின்னற்கொடி; இஃது அக்கனியர்க்குவமை. வட்டகை - கிண்ணம். அம்மகளிர் மதுவை வார்த்து மாறிமாறிக்கொடுக்கும் வெள்ளிக் கிண்ணங்கட்கு ஒருமுழையில் மாறிமாறிக் கதிர்பொழியும் இரண்டு தங்கள் உவமை என்க. இஃது இல்பொருளுவமை. முழை-அக்களிமகன் வாய்க்குவமை. தீங்கதிர் கள்ளுக்குவமை. 
 | 
( 88 ) | 
 
வேறு
 | 
  | 
 
 
|  939 | 
அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச் |  
|   | 
சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் |  
|   | 
கழலன் காழகம் வீக்கிய கச்சையன் |  
|   | 
மழலைச் சொற்களின் வைதிவை கூறினான். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) அழல் அம்பூ நறவு ஆர்ந்து - அழல் போன்ற அழகிய மலரால் ஆக்கின நறவை அருந்தியதனால்; அழல் ஊர்தரச் சுழலும் கண்ணினன் - வெம்மை பரக்கச் சுழலும் கண்ணினனாய்; சோர் தரும் மாலையன் - கழலும் மாலையனாய்; கழலன் - கழலுடையவனாய்; காழகம் வீக்கிய கச்சையன் - கருமை பொருங்திய இறுக்கிய கச்சையனாய்; மழலைச் சொற்களின் வைது இவை கூறினான் - குழறுஞ் சொற்களாலே வைதபின் இவற்றைக் கூறினான். 
 | 
  |