| நாமகள் இலம்பகம் |
55 |
|
|
(இ - ள்.) விெரீஇ உற்றவர் நங்கைமார் கோழிமேல் எறிந்த ஒண்குழை - நெல்லுப் பார்த்திருக்கும் பெண்கள் கோழிமேல் எறிந்த ஒளிமிகுங் காதணி; பொன் சிறு தேர்மிசைப் பொலிந்த போதகம் நல்சிறார் ஊர்தலின் - பொன்னாலான சிறு தேரில் விளங்கும் யானையின்மேல் அழகிய சிறுவர்கள் ஊர்ந்து செல்கையில்; அத்தேர் உருள்கொடா வளமை சான்ற - அத்தேரை உருளாவண்ணம் புரியும் வளங்கள் நிறைந்தன.
|
|
|
(வி - ம்.) 'விரீகி' என்பது 'விெரீஇ' என ஆயிற்று. மற்று : அசை. விெரீஇ - நெல். 'குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர்' (தொல். சொல். 452. இளம் - உரை மேற்கோள்.)
|
|
|
இச் செய்யுளோடு,
|
|
| |
”நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் |
|
| |
கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை |
|
| |
பொற்கால் புதல்வர் புரவியின் றுருட்டும் |
|
| |
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்”. |
|
|
எனவரும் பட்டினப்பாலையை (22-6) நினைக.
|
|
|
இஃது அந்நகரக் குடிமக்களின் செல்வ மிகுதியைக் குறிப்பான் உணர்த்தியவாறாம்.
|
( 60 ) |
| 90 |
மாலையும் பசும்பொனு மயங்கி வார்கணைக் |
| |
கோலெயுங் குனிசிலை நுதலி னாரொடு |
| |
வேலிய லாடவர் விரவி விண்ணவ |
| |
ராலய மிதுவென வையஞ் செய்யுமே. |
|
|
(இ - ள்.) மாலையும் பசும்பொனும் மயங்கி - மாலையும் புதிய பொற்பூணும் கலக்கப்பட்டு; வார் கணைக்கோல் எய்யும் குனிசிலை நுதலினாரொடு - நீண்ட அலகினையுடைய அம்பை எறியும் வளைந்த வில்லைப்போன்ற புருவ மங்கையருடன்; வேல் இயல் ஆடவர் விரவி - வேல் பயிலும் ஆடவர்கள் கலக்கப்பட்டு; இது விண்ணவர் ஆலயம் என ஐயம் செய்யும் - இது வானவரின் இருப்பிடம்போலும் என்ற ஐயத்தை அந்நகர் உண்டாக்கும்.
|
|
|
(வி - ம்.) கணை - அலகு.
|
|
|
பசும்பொன் : கருவியாகு பெயராகப் பூண்களை உணர்த்தியது.
|
( 61 ) |
| 91 |
கற்சுணஞ் செய்ததோண் மைந்தர் காதலா |
| |
னற்சுணப் பட்டுடை பற்ற நாணினாற் |
| |
பொற்சுணத் தால்விளக் கவிப்பப் பொங்கிய |
| |
பொற்சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. |
|