பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 554 

   (வி - ம்.) எண் வினைகளை, 'எண்மர் கவிழ்ந்தனர்' (சீவக. 3076) எனத் துறவில் விரியக் கூறுவர்.

 

   எரிமாலை - தீயின் ஒழுங்கு. நுதி - நுனி. இறக்கி - இறக்கச் செய்து. இரணியன் முதலிய பகைவரைப் படைக்கலனாற் கொன்றமை திருமால் முதலிய தேவர்கட்குச் சினமுண்மையைக் காட்டுதலானும் காமன்கணையால் நொந்து அத்தேவர்கட்கு மகளிர் போகமுடைய ராதலைக் காட்டுதலானும் இவ்வாற்றால் காமவெகுளி மயக்கமுடைய அத்தேவர் இறைவர் ஆகார் என்பது கருத்து. திருவுறுக என்றது இகழ்ச்சிக் குறிப்பு. எண்வினை - ஞானாவரணீயம் முதலியன. மாலை அல்லது என்புழி மால் அருகக் கடவுள்.

( 111 )
962 ஒன்றாய வூக்கவோ் பூட்டி
  யாக்கைச் செறுவுழுது
நன்றாய நல்விரதச் செந்நெல்
  வித்தி யொழுக்கநீர்
குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின்
  வேலி காத்தோம்பின்
வென்றார் தம் வீட்டின்பம் விளைக்கும்
  விண்ணோ ருலகீன்றே.

   (இ - ள்.) ஒன்றாய ஊக்க ஏர் பூட்டி - பிளவுறாத ஊக்கமாகிய ஏரைப்பூட்டி; யாக்கைச் செறுஉழுது - உடம்பாகிய செய்யைத் தவத்தாலே வருந்துவித்து; நன்று ஆய நல்விரதச் செந்நெல் வித்தி - நல்ல நோன்பாகிய செந்நெல்லை விதைத்து; ஒழுக்கம் நீர் குன்றாமல் தாம் கொடுத்து - நல்லொழுக்கமாகிய நீரை வற்றாமற் பாய்த்தி; ஐம்பொறியின் வேலி காத்து ஓம்பின் - ஐம்பொறியாகிய வேலியைப் புலனாகிய பசுக்கள் பிரியாத வண்ணம் காத்துத் தீங்கைத் தடுத்தால்; (அந்நிலை) விண்ணோர் உலகு ஈன்று - முதலில் துறக்கத்தினை நல்கி; வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் - புலனை வென்ற சித்த பரமேட்டிகளின் பேரின்ப வீட்டினைத் தரும்.

 

   (வி - ம்.) ஊக்கத்திற்கு ஏரும், யாக்கைக்கு வயலும், விரதத்திற்குச் செந்நெல்லும், ஒழுக்கத்திற்கு நீரும் பொறியடக்கத்திற்கு வேலியும் வீட்டின்பத்திற்கு அச்செந்நெல் விளைவும் உவமைகள். வென்றார் - சித்தபரமேட்டிகள். (960) 'சொல்லிய' முதலிய மூன்று கவியும் சீவகன் தோழரை நோக்கிக் கூறியவை.

( 112 )

வேறு

 
963 இத்தலை யிவர்க ளேக
  விமயநட் டரவு சுற்றி
யத்தலை யலற முந்நீர்
  கடைந்தவ ரரவ மொப்ப