| குணமாலையார் இலம்பகம் |
569 |
|
|
(வி - ம்.) இவள் வேட்கை வருத்தத்தை யானைக்கு வருந்தினாளாக உட்கொண்டனர்.
|
|
|
மணிசெய் கந்து - மணியாற் செய்ததூண். கந்துபோலும் என மருள என விரிக்க. செல்லல் - துன்பம். பொன்கொம்பு; குணமாலை காதலார் - ஈண்டுத் தோழியர்.
|
( 136 ) |
| 987 |
முழங்கு தெண்டிரை மூரி நீணிதி |
| |
வழங்கு நீண்டகை வணிகர்க் கேறனான் |
| |
விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் |
| |
குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். |
|
|
(இ - ள்.) முழங்கு தெண்திரை மூரி நீள்நிதி வழங்க - ஆரவாரிக்கும் தௌ்ளிய அலைகளையுடைய கடல்போலப் பெருமை பெற்ற மிகுந்த செல்வத்தை வழங்கியதால்; நீண்டகை வணிகர்க்கு ஏறு அனான் - நீண்ட கைகளையுடைய வணிகர் தலைவன் குபேரமித்திரன்; விழுங்கு காதலாள் - விழுங்குமாறு போன்ற காதலையுடையாளாகிய; வேற்கண் பாவை தாய் - வேலனைய கண்ணாள் குணமாலையின் அன்னை; குழைந்த கோதையைக் கண்டு கூறினாள் - வாடிய மலர்க் கோதைபோலிருந்த குணமாலையைக் கண்டு ஒருமொழி யுரைத்தாள்.
|
|
|
(வி - ம்.) குணமாலையின் அன்னை விநயமாமலை. அப் பெயர் தோன்ற, 'வேற்கட்பாவை' என்றார். வருத்தந் தோன்ற 'குழைந்த கோதை' என்றார்.
|
|
|
ஒருகை இருமருப்பின் மும்மதத்தது என்புழி முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. திருகு கழல், கனைகழல் எனத் தனித்தனி கூட்டுக. இளையாள் : குணமாலை. முருகு - நறுமணம். உய்யானம் - பூம்பொழில்.
|
( 135 ) |
வேறு
|
|
| 986 |
மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய |
| |
திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய |
| |
வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் |
| |
றணிவில் காதலார் தாங்கொ டேகினார். |
|
|
(இ - ள்.) மணி செய் கந்துபோல் மருள வீங்கிய திணி பொன் தோளினான் - மாணிக்கத் தூண்போலும் என ஐயமுறப் பருத்த திண்ணிய தோளையுடைய சீவகனால்; செல்லல் நீக்கிய அணி பொன் கொம்பினை - துன்பம் நீக்கப் பெற்ற அணிகலனுடைய பொற்கொடி போன்ற குணமாலையை; தன் தணிவு இல் காதலார் - அவளுடைய நீங்காத அன்புறு தோழியர்; அழுங்கல் என்று தாம் கொடு ஏகினார் - வருந்தற்க என்று தாங்கள் அழைத்துச் சென்றனர்.
|
|