| நாமகள் இலம்பகம் |
57 |
|
| 93 |
இட்டவெண் ணிலப்படா வகையி னீண்டிய |
| |
முட்டிலா மூவறு பாடை மாக்களாற் |
| |
புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய |
| |
மட்டிலா வளநகர் வண்ண மின்னதே. |
|
|
(இ - ள்.) இட்டஎள் நிலம்படா வகையின் ஈண்டிய - போகட்ட எள் நிலத்திலே வீழாதவாறு திரண்ட; முட்டிலா மூவறு பாடை மாக்களால் - குறைவற்ற பதினெட்டு மொழி பேசும் மக்களாலே; புள்பயில் பழுமரம் பொலிவிற்று ஆகிய - பறவைகள் வாழும் பழுத்த மரத்தின் இயல்பினையுடைய; மட்டு இலா வளம்நகர் வண்ணம் இன்னது - அளவற்ற வளந் தரும் நகரின் இயல்பு இதுவரை கூறியவாறாகும்.
|
|
|
(வி - ம்.) மிலேச்சராதலின் ஐயறிவிற்குரிய 'மாக்கள்' என்னும் பெயராற் கூறினர்.
|
|
|
இதனானே நெருக்கமும் ஓசை வேறுபாடும் பயன்கோடலும் கூறினார்.
|
|
|
'கடிநகர் அமைதி செப்புவாம்' (சீவக. 78) என்றது முதலாக நடுவு கூறிய வினைகளைப், 'புடைநகர்த் தொழிலிடங் கடந்து' (சீவக. 85) என்பதனோடு முடித்து, அதுமுதல் இடைகளிற் கூறிய வினைகளை, 'இன்னது' என்பதனோடு முடிக்க.
|
( 64 ) |
அகழி
|
|
| 94 |
தங்கொளி நித்திலத் தாமஞ் சூடிய |
| |
வெங்களி யிளமுலை வேற்கண் மாதரார் |
| |
பைங்கிளி முன்கைமேற் கொண்டு பார்ப்பெணும் |
| |
கொங்கலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். |
|
|
(இ - ள்.) தங்குஒளி நித்திலத் தாமம் சூடிய - நிலைபெற்ற ஒளியையுடைய முத்துமாலையை அணிந்த; வெங்களி இளமுலை வேற்கண் மாதரார் - விருப்பமும் மகிழ்ச்சியும் தரும் இள முலைகளையும் வேலனைய கண்களையும் உடைய மங்கையர்; பைங்கிளி முன்கைமேல் கொண்டு பார்ப்பு எணும் - பசுங்கிள்ளையை முன்கையிலேந்தி அன்னப் பார்ப்புகளை அக்கிளிக்கு எண்ணிக் காட்டுதற்குரிய; கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம் - தேன் கமழும் தாமரை மலர் நிறைந்த அகழிகளைக் கூறுவோம்.
|
|
|
(வி - ம்.) 'சூடிய' என்றார். 'முலைமுடி சூடிற்று' என்றாற்போல. வெம்மை - விருப்பம். மேல், தாமரை கூறுதலின் பார்ப்பு அன்னப் பார்ப்பு. [பார்ப்பு - பறவைக் குஞ்சு].
|
( 65 ) |