| குணமாலையார் இலம்பகம் |
578 |
|
|
களைத் திருத்தமாக இடுவதற்குத் தொடுவான்; புகழ்ந்து தன் தோள்களிற் புல்லும்-அவளழகைப் புகழ்ந்து தன் தோள்களால் தழுவுவான்.
|
|
|
(வி - ம்.) நோக்கி : நோக்கில்லாத நோக்கம் (மன நோக்கம்) நோக்கியே: இது பொறியால் நோக்கும் நோக்கம். வெருவி நின்ற நடுக்கம் எழுதலின், குலைந்தனவற்றை மயக்கத்தால் திருத்தத் தேடினான். மாலை : அவள் பெயரெனினும் ஆம். 'மணிக்குரல் மாலையும்' பாடம். (குரல் : ஐம்பாலில் ஒன்று)
|
( 154 ) |
| 1005 |
படைமலர் நெடுங்கணாள் பரவை யேந்தல்குன் |
| |
மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் |
| |
புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன |
| |
வடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்றவே. |
|
|
(இ - ள்.) படைமலர் நெடுங்கணாள் பரவை ஏந்த அல்குல் - வேற்படையும் மலரும் போன்ற நீண்ட கண்ணவளின் பரவிய ஏந்திய அல்குலில்; மிடை மணிமேகலை நோற்ற - செறிந்த மணிமேகலைகள் நோற்றன; வெந்தொழில் புடைதிரள் வனமுலைப் பூணும் நோற்றன - கொடுந்தொழிலையுடைய, பக்கங்களிலே திரண்ட அழகிய முலைகளிற் பூண்களும் நோற்றன; அடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்ற - அடிகளாகிய தாமரை மலரில் அணிந்த சிலம்புகளும் நோற்றன.
|
|
|
(வி - ம்.) யானே நோற்றிலேன் என்பது குறிப்பெச்சம்.
|
|
|
படை - ஈண்டு வேல். மலர் - தாமரை மலர். பரப்புடையதாய் ஏந்திய அல்குல் என்க. வெந்தொழில் முலை புடைதிரள்முலை எனத் தனித்தனி கூட்டுக. அடித் தாமரை மலர் என மாறுக. 'அடிமலர் ஒருசொல்' என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 155 ) |
| 1006 |
மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் |
| |
கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் |
| |
தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை |
| |
மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. |
|
|
(இ - ள்.) மின் அணங்குறும் இடை மேவரு சாயலுக்கு - மின்னை வருத்தும் இடையும் விருப்பம் வரும் மென்மையுமுடைய குணமாலைக்கு; இறைமகன் இன்னணம் புலம்ப - சீவகன் இவ்வாறு வருந்தக் கண்டு; தன் அணங்குறும் மொழித் தத்தையாவதும் மகிழ்ந்து - தன் குணமாலையின் வருந்துமொழியைக் கொண்டு வந்த கிளி எல்லா வகையானும் மகிழ்ந்து; தத்தையை மன் அணங்கு உறலொடு கண்டது - காந்தருவதத்தை வருவதை மிகுதியான வருத்தத்துடன் கண்டது.
|
|