பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 579 

   (வி - ம்.) மேவர் : மேவரு என்பதன் விகாரம். எல்லா வழியானும் பெறுதற்குரியவன் வருந்ததுலின் 'இறைமகன் புலம்ப' என்றார்.

( 156 )
1007 ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற்
சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி
லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை
கூடிமற் றதன்புறங் குலாய கொள்கைத்தே.

   (இ - ள்.) ஆடு பாம்பு எனப் புடை அகன்ற அல்குல்மேல் - (படம் விரித்து) ஆடும் அரவம்போல அகன்ற அல்குலின் மேல்; சூடிய கலைப்புறம் சூழ்ந்த பூந்துகில் -அணிந்த மேகலையின்மேல் சுற்றிய அழகிய ஆடை; வளைத்து ஓடிய எரி - வளைய ஓடின எரியை; உருவ வெண்புகை - நிறமுடைய வெள்ளிய புகை; கூடி அதன்புறம் குலாய கொள்கைத்தே - சேர்ந்து வளைத்து அதன் புறத்திலே நிலைபெற்ற தன்மையது.

 

   (வி - ம்.) பாம்பு அல்குற்கே உவமையாதலின் அடுத்துவரல் உவமை அன்று; 'அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே' (தொல். 34) என்றார். மற்று : அசை. 'மாண்குலாம் குணத்தினால்' (சீவக. 2233) என்பர் பின்னும்.

( 157 )
1008 கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன
மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி
ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன
பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே.

   (இ - ள்.) கொன்வளர் குவிமுலைக் கோட்டில் - பெருமை வளரும் குவிந்த முலைக் கோட்டிலே; தாழ்ந்தன மின்வளர் திரள்வடம் - கிடந்தவனவாகிய ஒளிவளரும் முத்துவடங்கள்; பைங்கதிர் இன்வளர் இளம்பிறை - புதிய கதிர்களையுடைய இனிமை வளரும் இளம்பிறை; எழுதப்பட்டன பொன்வளர் செப்பின்மேல் பொலிந்த போன்றவே - எழுதப்பட்டன போன்ற பொன்னால் வளர்ந்த செப்பின்மேல் பொலிந்தன போன்றன.

 

   (வி - ம்.) கொன் - பெருமை. முலைக்கோட்டிற் கிடந்த முத்து வடம் செப்பின்மேற் பிறை பொலிந்தன போன்றன என்க. வடம் பல வாகலிற் பன்மை பிறைக்கும் கூறினர்.

( 158 )
1009 குண்டல மொருபுடை குலாவி வில்லிட
விண்டலர்ந்த தொருபுடை தோடு மின்செய
மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே
யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே.

   (இ - ள்.) குண்டலம் ஒருபுடை குலாவி வில்இட - குண்டலம் ஒரு புறத்தே வளைந்து ஒளிசெய ; தோடு ஒருபுடை விண்டு