| நாமகள் இலம்பகம் | 
58  | 
  | 
|  95 | 
கோட்சுறா வினத்தொடு முதலைக் குப்பைக |  
|   | 
ளாட்பெறா திரிதர வஞ்சிப் பாய்வன |  
|   | 
மோட்டிறாப் பனிக்கிடங் குழக்க மொய்த்தெழுந் |  
|   | 
தீட்டறாப் புள்ளின மிரற்று மென்பவே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள் - ஆற்றல்மிகும் சுறாவின் இனத்துடன் முதலைத் திரள்கள்; ஆள்பெறா திரிதர - கரையிலே ஆட்களை எதிர்ப்படப் பெறாமல் உள்ளே திரிதலால்; அஞ்சிப் பாய்வன மோட்டு இறா - அவற்றிற்கஞ்சி விரைந்து பாயும் பெரிய இறா மீன்கள்; பனிக்கிடங்கு உழக்க - குளிர்ந்த அகழியைக் கலக்குதலால்; ஈட்டு அறாப் புள்ளினம் எழுந்து இரற்றும் - கூட்டம் பிரியாத பறவைத்தொகுதி எழுந்து ஆரவாரிக்கும். 
 | 
  | 
| 
    (வி - ம்.) முன்னே கழியணைந்தமை (92-ஆஞ் செய்யுள்) பெறுதலின் சுறவு கூறினார். [கழி : உப்பங்கழி.]கரையில் அஞ்சி ஆழத்திற் சென்றால் ஆளைக் கொல்லுதல் அவற்றிற்குத் தொழில். 
 | 
( 66 ) | 
|  96 | 
சிறையனப் பெடையினோ டூடிச் சேவல்போய் |  
|   | 
அறுபத வண்டின மார்ப்பத் தாமரை |  
|   | 
யுறைவது குழுவினி னீங்கி யோகொடு |  
|   | 
கறையற முயல்வதோர் கடவு ளொத்ததே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) சிறை அனம் பெடையினோடு சேவல் ஊடிப் போய் - சிறகினையுடைய அன்னப் பறவையோடு சேவல் பிணங்கிச் சென்று; அறுபத வண்டினம் ஆர்ப்பத் தாமரை உறைவது - ஆறு கால்களையுடைய வண்டின் கூட்டம் முரலத் தாமரை மலரிலே குவிந்திருப்பது; குழுவினின் நீங்கி - சுற்றத்தினின்றும் நீங்கி, கறைஅற யோகொடு முயல்வதோர் கடவுள் ஒத்தது - குற்றம் நீங்கத் (தீயிடை நின்று) யோகத்தோடு தவஞ்செய்யும் ஒரு கடவுளைப் போன்றது. 
 | 
  | 
| 
    (வி - ம்.) யோகம் : 'யோகு' எனத் திரிந்தது. கறை - மும்மலம். எழுந்த வண்டு புகைக்கும் , பூ நெருப்பிற்கும் உவமம், மும்மலம் : காமம், வெகுளி, மயக்கம். 
 | 
  | 
| 
    இதன்கண் 'வண்டினம் ஆர்ப்பத் தாமரை' என்று வந்தமையால் தீயிடைநின்று என்று பொருள் கூறி, மேலும் 'வண்டு புகைக்கும் பூ நெருப்பிற்கும் உவமம்' என்று விளக்குதல் போற்றத்தக்கதாம். 
 | 
( 67 ) | 
|  97 | 
அரும்பொனும் வெள்ளியு மணியு மல்லது |  
|   | 
கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை |  
|   | 
குரும்பைமென் முலையின்மேற் குலாய குங்குமம் |  
|   | 
விருந்துசெய் திடவெறி மேனி சேந்ததே. | 
 
 
 |