| குணமாலையார் இலம்பகம் |
580 |
|
|
அலர்ந்து மின்செய - தோடு மற்றொரு புறத்தே வேறுபட விரிந்து ஒளிவீச; மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் - வட்டமாக நிறைவுற்ற ஒருதிங்கள் (இருப்பின்); ஒண்தொடி திருமுகத்து உருவமாட்சி அன்னது - ஒள்ளிய வளையணிந்த இம்மங்கையின் திருமுகத்தின் உருவ அழகு அத்தகையது.
|
|
|
(வி - ம்.) 'இஃ தில்பொரு ளுவமை. குண்டலம் ஒரு காதினும் தோடு ஒரு காதினும் அணிந்ததிருத்தலால் இங்ஙனம் உவமை கூறினர். மண்டிலம் - வட்ட வடிவம். மதியம் - திங்கள்.
|
( 159 ) |
| 1010 |
பூணிற முலையவள் பொருவில் பூநுதன் |
| |
மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய |
| |
நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி |
| |
வானிற மின்னிருள் வளைந்த தொத்ததே. |
|
|
(இ - ள்.) பூண் நிறம் முலையவள் - பூணையும் நிறத்தையும் உடைய முலையாளின்; மாண் நிறக் கருங்குழல் மருங்கில் - சிறந்த நிறமுடைய கரிய கூந்தலின் பக்கத்திலே; பொருஇல் பூநுதல் போக்கிய - ஒப்பற்ற அழகிய நெற்றியிலே சேர்த்துள்ள ; நாள் நிறம் மிகுகதிர் பட்டம் நல்லொளி - நாடொறும் ஒளி மிகும் பிறைமதி போன்ற பட்டத்தின் நல்லொளி; வாள்நிறம் மின் இருள் வளைந்தது ஒத்தது - ஒளி பொருந்திய நிறமுடைய மின் இருளை வளைந்தது போன்றது.
|
|
|
(வி - ம்.) 'நாணிற மிகுகதிர்ப் பூநுதல்' என இயைத்து 'நாடொறும் நிறம் மிகும் பிறைபோன்ற அழகிய நுதல்' என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
|
நெற்றிற்குப் பிறையும் கூந்தலுக்கும் இருளும் பட்டத்திற்கு மின்னலும் உவமைகள்.
|
( 160 ) |
| 1011 |
கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை |
| |
வடிவுடை மாலைகால் தொடர்ந்து வாய்ந்தது |
| |
நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் |
| |
கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. |
|
|
(இ - ள்.) காமர் மல்லிகை வடிவுடை மாலை - அழகிய மல்லிகையாலான வடிவுறு மாலை; கால் தொடர்ந்து வாய்ந்தது கடிகமழ்பூ சிகை - தன்னிடத்தே கட்டப்பட்டுப் பொருந்திய மணமிகுமலர் முடி ; நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மாமலர்க் கொடியின்மேல் - நடுவு வளைந்து நுடங்கிய மணமுறும் மலர்க்கொடியின்மேல்; குயில் குனிந்து இருந்தது ஒத்தது - குயில் வளைந்து தங்கிய தன்மையை ஒத்தது.
|
|