| குணமாலையார் இலம்பகம் |
592 |
|
|
தன் காதலி ஊடலை - தத்தையின் பிணக்கை ; ஒண்மலர் உறைந்த சென்னியின் நீக்கினான் - சிறந்த மலர்கள் அணிந்த தன் முடியாலே வணங்கி நீக்கினான்; நெடுங்கணிக்கு இன்பம் நிறைந்தது - நீண்ட கண்களையுடைய தத்தைக்கு இன்பம் நிறைவுற்றது.
|
( 184 ) |
|
(வி - ம்.) வேலவன் : சீவகன். காதலி - ஈண்டுக் காந்தருவதத்தை. சென்னியின் நீக்கினான் என்றது, அவளடிகளிலே வீழ்ந்து வணங்கி அவ்வூடலை நீக்கினன் என்றவாறு. நெடுங்கணி என்புழி ணகர வொற்றுக் கெட்டது: செய்யுள் விகாரம்.
|
( 184 ) |
வேறு
|
|
| 1035 |
தன்றுணைவி கோட்டியினி னீங்கித் தனியிடம்பார்த் |
| |
தின்றுணைவற் சோ்வா னிருந்ததுகொல் போந்ததுகொல் |
| |
சென்றதுகொல் சோ்ந்ததுகொல் செவ்வி அறிந்துருகு |
| |
மென்றுணைவி மாற்றமிஃ தென்றதுகொல் பாவம். |
|
|
(இ - ள்.) சென்றது கொல் - (கிளி) சென்றதோ?; தன் துணைவி கோட்டியினின் நீஙகி - தன் காதலியுடன் இருக்கும் இருப்பினின்றும் நீங்கி; தனி இடம் பார்த்து இன்துணைவன் சேர்வான் இருந்தது கொல் - தனியேயிருக்கும் இடத்தைப் பார்த்து என் இனிய காதலனை அடையக் (காலங்கருதி) இருந்ததோ?; போந்தது கொல்? - (கோட்டி பெறாதே) திரும்பி விட்டதோ?; சேர்ந்தது கொல்? - இடம் அறிந்து சேர்ந்ததோ?; செவ்வி அறிந்து - இடம் பெற்றபின் காலமும் அறிந்து ; உருகும் இன்துணைவி மாற்றம் இஃது என்றது கொல்? - உருகும் நின் இனிய துணைவியின் மொழியீது என்றுரைத்ததோ?; பாவம்! - இஃதொரு பாவம் இருந்தவாறு என்னே?
|
|
|
(வி - ம்.) கிளிப்பிள்ளையும் தானும் பட்டது 'என்' என்றாள்.
|
|
|
தன் துணைவி என்றது ஈண்டுக் காந்தருவதத்தையை. கோட்டி - கூட்டம். சேர்வான் - சேரும் பொருட்டு. கொல் அனைத்தும் ஐயப் பொருளன. செவ்வி - தகுந்த காலம். காமத்தால் வருந்தும் நெஞ்சத்தின் விதுவிதுப்பை இச் செய்யுள் நன்கு உணர்த்துதல் உணர்க. இங்ஙனமே இதனுடன் ”இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல் இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் இவ்வளவின் மீளுங்கொல்” எனவரும் நளவெண்பாவினையும் (சுயம் - 40) நினைக.
|
( 185 ) |
வேறு
|
|
| 1036 |
செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோ ரின்னுரைதான் |
| |
றந்தாரேற் றந்தாரென் னின்னுயிர்தாந் தாராரே |
| |
லந்தோ குணமாலைக் காதகா தென்றுலக |
| |
நொந்தாங் கழமுயன்று நோற்றானு மெய்துவனே. |
|