பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 60 

கமுகின்மேல் விரிந்த விரைகமழ் பாளையும் - கமுகின்மேல் மலர்ந்த மணங்கமழும் பாளையும்; கிடங்கிற் பூத்த குரைமதுக் குவளைகள் - அகழியிற் பூத்த ஒலிக்கும் தேனையுடைய குவளைகளும்; உரையின் உலாவி ஓரோசனை நாறும் - புகழுற எங்கும் பரவி ஓரோசனையளவு கமழும்.

 

   (வி - ம்.) குரைமது : வினைத்தொகை. உரை - புகழ். புகழால் எங்கும் உலாவி.

 

   யோசனை : சைனர் கொள்கைப்படி நாற்காதம்.

( 70 )

மதில்

 
100 தாய்முலை தழுவிய குழவி போலவு
மாமலை தழுவிய மஞ்சு போலவு
மாய்முகில் தழீஇயசும் பறாத நெற்றிய
சேயுயர் மதில்வகை செப்பு கின்றதே.

   (இ - ள்.) ஆய்முகில் தழீஇ குழவி தழுவிய தாய்முலை போலவும் - நீர்சுமந் திளைத்த மேகத்தைத் தன்னிடத்தே அணைத்தலாலே குழவியை அணைத்த தாயின் முலைபோலவும் ; மஞ்சு தழுவிய மாமலைபோலவும் - முகிலைத் தன்னிடத்தே அணைத்த பெரிய மலைபோலவும்; அசும்பு அறாத நெற்றிய - நீர்த்துளி நீங்கத தலையையுடைய; சே உயர் மதில்வகை செப்புகின்றதே - மிகவுயர்ந்த மதிலின் கூறுபாடு இனிக் கூறப்படுகின்றது.

 

   (வி - ம்.) குழவி தழுவிய தாய்முலை போலவும், மஞ்சு தழுவிய மாமலை போலவும் என மாறிக் கூட்டுக. ஆய்முகில் - இளைத்த மேகம். அசும்பு - நீர்த்துளி.

( 71 )

வேறு

 
101 மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந்
தோற்றமுறு போய்களிறு துற்றுபெரும் பாம்புங்
கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா.

   (இ - ள்.) மாற்றவர் மறப்படை மலைந்து மதில் பற்றின் - பகைவர் மறமிகும் படைகளால் பொருது அகழைக் கடந்து மதிலைப் பற்றினால்; நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியும் - நூறுபேரை ஒருமுறையிற் கொல்லும் 'சதக்கினி' என்னும் பொறியும் தள்ளி அடிக்கும் பொறியும்; தோற்றம் உறுபேய் - காணப்படுவதொரு பேய்போன்ற பொறியும்; களிறு,