பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 609 

யாத காமனான சீவகன் ; விரைசென்று அடைந்த குழலாளை - மணம் வந்து பொருந்திய கூந்தலாளை; வேட்டன் - மணந்தான்.

 

   (வி - ம்.) கலி - முழக்கம். கல்லென் : ஒலிக்குறிப்பு. கறங்க - முழங்க. முழா - முழ என ஈற்று ஆகாரம் குறுகி நின்றது. பிரசம் - வண்டு. பிணங்க - நெருங்கும்படி. குழலாள் : குணமாலை. வேனிலான் : சீவகன் : ஆகுபெயர்.

( 213 )
1064 மழைமொக்கு ளன்ன வருமென்முலை மாதர் நல்லா
ரிழைமுற் றணிந்தா ரெழுநூற்றுவர் கோடி செம்பொன்
கழைமுற்று தீந்தேன் கரும்பார்வய லைந்து மூதூர்
குழைமுற்று காதின் மணிக்கொம்பொடு நாய்க னீந்தான்.

   (இ - ள்.) மழை மொக்குகள் அன்ன வரும் மென்முலை மாதர் நல்லார் - மழைநீரின் குமிழிபோல வளரும் மென்முலைகளையுடைய இளம் பெண்கள் ; இழைமுற்றும் அணிந்தார் எழுநூற்றுவர் - எல்லோரும் அணிகலன் அணிந்தவராக எழுநூறு மகளிரும் ; கோடி செம்பொன் - கோடி பொன்னும் ; தீதேன் முற்று கரும்பின் கழை ஆர்வயல் - இனிய தேனையுடைய முற்றிய கருப்பங் கழிகளையுடைய கழனி சூழந்த ; ஐந்து மூதூர் - ஐந்து பழம்பதிகளும் ஆகிய இவற்றை ; குழைமுற்று காதின் மணிக்கொம்பொடு - குழை பொருந்திய காதினையுடைய மணிக்கொம்பான குணமாலையை நீர்வார்த்துக் கொடுக்கும்போது ; நாய்கன் ஈந்தான் - குபேரமித்திரன் கொடுத்தான்.

 

   (வி - ம்.) நல்லார் எழுநூற்றுவரும் இழையணிந்தார் எழுநூற்று வரும் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.

 

   மழைமொக்குகள் முலைக்குவமை. மாதர் நல்லார் - அழகும் நன்மையும் உடைய மகளிர். வயலையுடைய ஐந்து பழைய ஊரும் என்க. மணிக்கொம்பு : குணமாலை. நாய்கன் - குபேரமித்திரன்.

( 214 )

வேறு

 
1065 கண்ணார் கதிர்மென் முலைக்காம் படுமென்றோள்
விண்ணோ ருலகின் னொடுமிந் நிலத்தில்லாப்
பெண்ணா ரமிர்தே யவன்பெற் றவமிர்தே.
பண்ணார் கிளவிப் பவழம் புரைசெவ்வாய்க்

   (இ - ள்.) அவன் பெற்ற அமிர்து - சீவகன் அடைந்த அமிர்து; விண்ணோர் உலகின்னொடும் இந்நிலத்து இல்லா - வானவர் உலகினும் இந்த நிலவுலகினும் இல்லாத; பண்ஆர் கிளவி - பண் நிறைந்த மொழியையும்; பவழம் புரை செவ்வாய் - பவளம் அனைய செவ்வாயையும்; கண்ஆர் கதிர்மென்முலை -