| குணமாலையார் இலம்பகம் |
612 |
|
|
(சீவக. 893) என்றும் , 'உய்த்துரைமின்' (சீவக. 895) என்றுங் கூறுதலின், வாய்காவாது கூறிற்றென்பது பொருந்தாது. 'ஓவா அமிர்து' என்றும் பாடம்.
|
( 219 ) |
| 1070 |
நற்றோ ளவள்சுண் ணநலஞ் சொலுவா |
| |
னுற்றீர் மறந்தீர் மனத்துள் ளுறைகின்றாள் |
| |
செற்றா லரிதாற் சென்மின்போ மின்றீண்டா |
| |
தெற்றே யறியாத வொரேழை யேனோயான். |
|
|
(இ - ள்.) நல் தோளவன் சுண்ண நலம் சொலுவான் உற்றீர் - (நும்முடைய) அழகிய தோளினளின் சுண்ணத்திற்கே நன்மை கூறக் கருதினீர் ; மறந்தீர் - என் நல்வினையாலே அதனை மறந்தீர் ; மனத்துள் உறைகின்றாள் - அவள் உம்முடைய உள்ளத்திலே வாழ்கின்றாளாதலின்; செற்றால் அரிது - அவள் சினந்தாற் சினந்தீர்த்தல் அரிது; சென்மின் ! தீண்டாது போமின் ! - இவ்விடத்தினின்றும் இனிச் செல்லுமின்! என்னையருளித் தீண்டாதே போமின் ; எற்றே ! - என்னே !; யான் அறியாத ஓர் ஏழையேனோ? - யான் நுமக்கு வரும் துன்பத்திற்கு வருந்தாத அறிவிலியோ?
|
|
|
(வி - ம்.) 'சென்மின்' எனத் தீண்டுதலின், 'தீண்டாதே போமின்' என்றாள். 'பணைத்தோள் சுரமஞ்சரி' என்றதனாலும், 'தோற்றாள்' என்பதனாலும் ஊடல் நேர்ந்தது.
|
|
|
சீவகன் சுரமஞ்சரி தோற்றாள் என்றதுபற்றி அவள் நும் மனத்துள்ளுறைகின்றார் சென்மின் போமின் என்னும் இவ்வூடல் மிகவும் நுண்ணிதாதல் உணர்க.
|
( 220 ) |
| 1071 |
தூமஞ் கமழ்பூந் துகில்சேரா வசையாத் |
| |
தாமம் பரிந்தாடு தண்சாந்தந் திமிர்ந்திட் |
| |
டேமன் சிலைவா ணுத லேற நெருக்காக் |
| |
காமன் கணையோ் கண்சிவந்து புலந்தாள். |
| |
அள்ளற் சேறரு மணல்புன லருவரைப் படினு |
| |
முள்ளம் போற்செல்வ வுரனசை வில்லன வமருட் |
| |
கொள்ளி மண்டிலம் போற்கொடி படத்திரிந் திடுவ |
| |
வெள்ளி மால்வரைத் தாழ்வதின் மேம்படப் பிறந்த. |
|
|
(இ - ள்.) தூமம் கமழ் பூந்துகில் சேரா அசையா - அகிற் புகை கமழும் அழகிய ஆடையை இறுக உடுத்து ; தாமம் பரிந்து - மாலையை அறுத்து ; ஆடு தண் சாந்தம் திமிர்ந்திட்டு - பூசிய குளிர்ந்த சந்தனத்தை உதிர்த்து ; ஏமன் சிலை வாள்நுதல் ஏற நெருக்கா - அம்பிசைந்த வில்லனைய ஒளி பொருந்திய புருவத்தை நெற்றியில் ஏந நெருக்கி; காமன் கணைஏர் கண் சிவந்து புலந்தாள் - காமன் கணையனைய அழகிய கண்கள் சிவக்க ஊடினாள்.
|
|
|
(வி - ம்.) தூமம் - நறுமணப்புகை. தாமம் - மாலை. பரிதல் - அறுத்தல். ஏ - அம்பு. சிலை - வில். காமன்கணை என்றது புருவத்தை.
|
( 221 ) |