| 
    (இ - ள்.) அஞ்ஞான்று அரும்பெறல் குருசிற்கு ஓடிய நாகம் - நீர் விளையாட்டின்போது, பெறுதற்கரிய சீவகனுக்குத் தோற்ற யானை ; நாணி - வெட்கமுற்று; கரும்பு எறி கடிகையோடு நெய்ம்மலி கவளம் கொள்ளாது - கருப்பந் துண்டங்களையும் நெய் நிறைந்த கவளத்தினையும் கொள்ளாமல்; இரும்புசெய் குழவித் திங்கள் - கிம்புரியிட்ட பிறைத்திங்கள் போன்ற ; மருப்பிடைத் தடக்கை நாற்றி - கொம்பிலே துதிக்கையை வளைத்துத் தொங்கவிட்டு ; சுரும்பொடு வண்டு பாட - மதம் மிகுதலின் உண்ண முடியாமல் சுரும்பும் வண்டு்ம் பாட ; சுளிவொடு நின்றது - சினத்தொடு நின்றது. 
 | 
  |