| குணமாலையார் இலம்பகம் |
620 |
|
| 1084 |
தன்றுணைப் பெட்டை யோடு |
| |
தான்புறப் பட்ட தொத்தான் |
| |
குன்றிரண் டிருந்த போலுங் |
| |
குங்குமக் குவவுத் தோ்ளான். |
|
|
(இ - ள்.) என்று அவள் உரைப்பக் கேட்டு - இவ்வாறு சேடி செப்பக் கேட்டு; குன்று இரண்டு இருந்த போலும் குங்குமக் குவவுத் தோளான் - மலைகள் இரண்டு இருந்தன போன்று, குங்குமம் அணிந்த திரண்ட தோளையுடைய சீவகன்; இடிபட முழங்கி - வெடித்தல் உண்டாக முழங்கி ; செந்தீ நின்று எரிவதனை ஒத்து - சிவந்த தீ நிலையாக எரிவதைப்போல ; நீள் முழை சிங்க ஏறு - பெருங்குகையிலிருந்த ஆண் சிங்கம் ; தன் துணைப் பெட்டையோடு - தன் துணையான பெண் சிங்கத்துடன்; தான் புறப்பட்டது ஒத்தான் - அது வெளிப்பட்டதைப் போல மண அறையினின்றும் குணமாலையுடன் வெளிப்பட்டான்.
|
|
|
(வி - ம்.) பெட்டை யென்பதற்கு 'எழுந்து விண்படரும்' (சீவக. 752) என்னும் செய்யுளிலே கூறப்பட்டது. இங்கும் நச்சினார்க்கினியர் பின்னர்த் தம்கோள் நிறுவ, 'இவ்விரண்டு கவியிலும் சீவகற்குச் சிங்க வேறு உவமையும், பகைவர்க்கு நரியுவமையுமாகக் கூறலின், அவராற் கட்டலாகாமையுணர்க' என்றனர்.
|
( 234 ) |
| 1085 |
பொன்னரி மாலை தாழப் |
| |
போதணி கூந்த லேந்திப் |
| |
பன்னரு மாலை யாற்குப் |
| |
பட்டதை யெவன்கொ லென்னாப் |
| |
பின்னரு மாலை யோராள் |
| |
பெருநடுக் குற்று நின்றாண் |
| |
மன்னரு மாலை நாக |
| |
மழையிடிப் புண்ட தொத்தாள். |
|
|
(இ - ள்.) மாலை, பொன் அரிமாலை தாழப்போது அணி கூந்தல் ஏந்தி - குணமாலை, பொன்னரி மாலை தாழுமாறு, மலர்க் கூந்தலைக் கையில் ஏந்தி; பின்னரும் ஓராள் - (முன்னர் யானையை அடக்கியபோது இவன் வலிமை அறிந்திருந்தும்) மறுமுறையும் அறியாதவளாய்; பன்னஅரு மாலையாற்குப் பட்டது எவன்கோல் என்னா - புகழ்தற்கரிய இயல்பினையுடையானுக்குப் பிறந்த துன்பந்தான் யாதோ என்று எண்ணி; பெருநடுக்கு உற்று நின்றாள் - மிகுதியும் நடுங்கி நின்றவள்; மன்அரு மாலை நாகம் மழை இடிப்புண்டது ஒத்தாள் - (மக்கள் திரளில்) நிலைபெறற் கரிய இயல்புறும் பாம்பு இடியால் தாக்குண்டது போல ஆனாள்.
|
|